கோடம்பாக்கம் Corner

அசுரன் வெற்றியைத் தொடர்ந்து வந்த பட்டாஸ் புஷ்வானம் ஆனாலும் தனுஷின் 41வது படத்திலிருந்து 50வது படம் வரையிலான அவரது அடுத்த 10 படங்கள் பற்றிய தகவல் உறுதியாகியுள்ளது.

இவற்றில் சில படங்களில் வரிசை மாறலாம். இபோதைக்கு உறுதியாகியிருக்கும் படங்களின் வரிசையைப் பார்ப்போம். தனுஷின் 40வது படம் ஜகமே தந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவருடைய 41வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்குவதாகவும் அது கர்ணன் என்றும் விரைவில் அது தலைப்பு மாற உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனுஷின் 42வது திரைப்படம் ஹிந்தி திரைப்படம் அதில் அக்‌ஷய் குமாருடன் தனுஷ் நடிக்கிறார். 43வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். ஜிவி இசையமைக்கிறார். 44வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பவர் பாண்டியைத் தொடர்ந்து இந்த படத்தை தனுஷே இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தனுஷின் 45வது படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 46வது திரைப்படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படம் புதுப்பேட்டை 2ஆக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. தனுஷின் 47வது திரைப்படத்தை குட்டி படத்தை இயக்கிய மித்திரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக கூறப்படுது.

48வது திரைப்படம் பவர் பாண்டி இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது, இதையும் தனுஷே இயக்குவார் என்றும் அதற்கான கதை விவாதத்துக்கு தனி குழுவை தனுஷ் அமைத்துள்ளார் என்றும் தெரிகிறது. மேலும் 49-வது படத்தை தனுஷின் மனைவி கதை என்று தனுஷ் வட்டத்திலும், அப்படி ஏதுமில்லை என்றும் ஐஸ்வர்யா தனுஷ் வட்டத்திலும் கூறிவந்தாலும் தனுஷின் மனைவி திரைக்கதை எழுதி முடித்துவிட்டார் என்றே கூறுகிறார்கள் அவரது உதவி இயக்குநர் வட்டத்தில்.

தனுஷின் 50வது திரைப்படம் வடசென்னை 2ஆக இருக்கலாம் என்று வெற்றிமாறன் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதை 2022 கிறிஸ்மஸுக்கு வெளியிடத் திட்டம் வைத்திருக்கிறார்களாம்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.