கோடம்பாக்கம் Corner
Typography

சன் குழுமத்தின் ஆதித்யா சேனலை பார்ப்பவர்களுக்கு லோகேஷ் பாபுபை தெரியாமல் இருக்காது. அதன்பின் நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை தேவைப்படுவதாக அவருடன் நடிக்கும் நடிகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி லேகேஷ் பாபு-வின் முழு வைத்திய செலவை ஏற்று கொண்டாராம். இன்று நேரிலும் போய் நலம் விசாரித்து வந்தாராம்.

கதாபாத்திரத்துக்காக உடலின் தோற்றத்தை எந்த எல்லைக்கும் சென்று மாற்றிவிடுவதில் முதலிடம் விக்ரமுக்கு. கமலோ ஒப்பனை மூலமே அந்த நிலைக்குச் சென்றுவிடுவார். தற்போது இருக்கும் நடிகர்களில் வேடத்துக்கு என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஆனால் உடல் எடையை குறைக்கச் சொன்னால் மட்டும் என்னால் முடியாது என்று அடம் பிடிப்பார்.

இதற்கு மாறாக தற்போது தனது மனதை மாற்றிக்கொண்டிருக்கிறார். தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பாலிவுட்டில் முக்கியமான படத்துக்காக தன்னை தயார் செய்துகொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அந்தப் படத்துக்காக கடுமையான டயட்டில் இருக்கிறார். அமீர் கானுடன் ‘லால் சிங் சத்தா’ படத்தில் நடிப்பதற்காகத்தான் இந்த டயட் மாற்றம் என்கிறார்கள். கிட்டத்தட்ட 25 கிலோ எடையைக் குறைக்க திட்டமாம். அப்படியொரு விஜய்சேதுபதி எப்படியிருப்பார் என்பதை கற்பனை செய்யவே ஆச்சரியமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்