கோடம்பாக்கம் Corner

தனது அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று 3 அம்ச திட்டங்களை வெளியிட்டு காலை 10.30 மணிக்கு பேசிய ரஜினி தமிழக மக்களை மண்டைக் காய வைத்தார் என்றால், மாலையில் நடந்த வெப் சீரிஸ் விழா ஒன்றில் பேசிய மிஷ்கின்  ‘ இனி உன்னை நான் விடப்போவதில்லை’ என்று விஷாலை கடுமையாக வசைபாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் மிஷ்கின் என்பதை அறிந்துகொள்ளும் முன் மிஷ்கின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்துகொள்வது அவசியம்.

மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்துள்ளது. அதற்குப் பிறகு விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் வெடித்தது. இதனால், இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுள்ள நிலையில் அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படமாக 'துப்பறிவாளன் 2' வெளிவரவிருக்கிறது. மேலும், விஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் அவரால் வெளியிடப்பட்டு இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் இன்று 'கண்ணாமூச்சி' என்ற வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்டுபேசியபோதுதான் இயக்குநர் மிஷ்கின் விஷாலை வறுத்தெடுத்தார். அவரது காட்டமான பேச்சின் விவரம் வருமாறு:

“ கடந்த ஒரு வருடமாக கதை இன்ரை யோசித்து எழுதினேன். என்னுடைய ஒவ்வொரு கதையின் கிளைமாக்ஸ் காட்சியையும் 10 நாட்கள் எழுதுவேன். 'துப்பறிவாளன் 2' கதையின் கிளைமாக்ஸ் காட்சியும் அப்படித்தான். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஒரு சகோதரனை மோசமாக பேசும் பொழுதும், பார்க்கும் போதும் அவரை என் தோளில் போட்டு சகோதரனாக பாவித்தேன். என் நிஜ தம்பியிடம் கூட நான் அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காக என் இரண்டாவது திரைக்கதையை எழுதினேன்.

2018-ல் துப்பறிவாளன் முதல் பாகம் வெளியானது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்போது மூன்று உதவியாளர்களுடன் கிளைமாக்ஸ் காட்சியை நான் மட்டும் படம் பிடித்தேன். கடைசியில் எங்களுக்கு பணமில்லை. நான்கு நாட்கள் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சியை, ஆறு மணி நேரத்தில் எடுத்துக் கொடுத்தேன். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது அனைவருக்கும் தெரியும்.

அதற்கு முந்தைய மூன்று படங்கள் விஷாலுக்கு தோல்வி. துப்பறிவாளன் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கதை எழுதச் சொன்னார், எழுதினேன். நிறைய கடன் இருக்கு, தமிழ் மட்டும் வேண்டாம், இந்திய அளவிலான மொழிகளில் எழுதலாம் என்று சொல்லி கோகினூர் வைரத்தை வைத்து கதை எழுதுகிறேன் என எழுதினேன். அதை ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடாலம் எனச் சொன்னோன். அந்தக் கதையை எழுதி முடித்தவுடன், அதைக் கேட்டுவிட்டு பாபி என்ற தயாரிப்பாளர் எனக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்தார். அதற்குப் பிறகு அந்தக் கதையைக் கேட்டு விஷாலுக்கு பிடித்துப் போய் என்னை கட்டிப்பிடித்து அழுதார். இந்தக் கதை எனக்கு போதும் என்றார். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன் என்றார்.

ஆனால் அந்தத் தயாரிப்பாளர் பாபியோ விஷால் தயாரிக்க வேண்டாம், நானே தயாரிக்கிறேன் என்றார். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி. 19 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று சொன்னேன். நீ பண்ண முடியாது, நீ கடனாளியாக இருக்கிறாய், ஆக்‌ஷன் வேறு வெளியாகவுள்ளது என்றும் சொன்னேன். ஒரு வேளை அந்தப் படம் சரியாக போகவில்லை என்றால், உன் மீது அதிகமான பாரம் வரும். ஆகையால் இந்தப் படத்தை தொடாதே என்றும் தெரிவித்தேன். இல்லை சார், இந்தப் படம் நான் பண்ணுவேன். எனக்கு உதவியாக இருக்கும் என்று சொன்னார். நானோ 'துப்பறிவாளன் 3' ஆக இதைப் பண்ணலாம். 2-ம் பாகமாக சென்னையில் நடப்பது மாதிரி 10 கோடி ரூபாய் பண்ணலாம். நான் எழுதி தருகிறேன் என்று சொன்னேன். அதற்கு, இந்தப் படத்தை தான் பண்ண வேண்டும் என்று சொன்னார். பல வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், இங்கிலாந்திற்கு சென்றது கிடையாது. இந்தக் கதையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் 7.5 லட்ச ரூபாய் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது 7 லட்ச ரூபாய் மட்டும் தான்.

ஆனால், அபாண்டமாக திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் நான் செலவு செய்ததாக தெரிவித்துள்ளார் விஷால். 35 லட்ச ரூபாய் செலவு பண்ணினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க விஷால் தயாரா? நான் ஒரு தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஒரு கதை எழுதுவதற்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்கிறான் என்றால், அவன் இயக்குநராவதற்கே தகுதியற்றவன் என்று சொல்வேன். விஷால் சொன்னவுடன் எழுதிய அனைவருமே, அதற்கான ஆதாரம் எங்கே என்று அவரிடம் கேட்க வேண்டும். அதேபோல் முதல் கட்டப் படப்பிடிப்புக்கு நான் 13 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். 32 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்ச ரூபாய் தான். அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால் கூட 10 கோடி ரூபாய் வரை தான் வந்துள்ளது.

அந்த 13 கோடி ரூபாய் செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு போய் படம் பண்ண வேண்டும் என்றால் உங்களுடைய கம்பெனியில் இருந்து பண்ண முடியாது. அங்கு ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கப்பட்டதுதான் தான் புட்லூர் அம்மன் நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு விஷால் நிறுவனத்திலிருந்து எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது என்று கேட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். இனி விஷாலை விடமாட்டேன்” என்று மிஷ்கின் தனது தரப்பை எடுத்துக் கூறியிருக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.