கோடம்பாக்கம் Corner

தமிழ் சினிமாவின் நம்பர் 1 காமெடியன் யோகிபாபு கதாநாயகனாக நடித்து நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘காக்டெய்ல்’. இந்தப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத்.

எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறையில் நுழைந்த இவர் 2016ல் பெங்களூருவின் சிறந்த மாடலாக வெற்றி பெற்றவர்.. கன்னடம். தமிழ், தெலுங்கு என மும்மொழிகளிலும் மாறிமாறி நடித்துவரும் ராஷ்மி கடந்த ஒரு வருடத்திற்குள்ளேயே ஆறு படங்களில் நடித்துவிட்டார் என்பது ஆச்சர்யமான ஒன்று.

“யோகிபாபுவை டிவியில பார்த்திருக்கேன்.. தியேட்டர்ல பார்த்திருக்கேன்.. ஆனா முதல்நாள் படப்பிடிப்பிலேயே அவருடன் சேர்ந்து நடிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் என்னுடைய டென்சனை எல்லாம் முதல்நாளே ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார் யோகிபாபு.. இந்தப்படத்தில் எனக்கு கிராமத்துப்பெண் வேடம்.. என்னை யாராவது ஏதாவது வம்புக்கு இழுத்து பேசினால் அதகளம் பண்ணிடுவேன் .. அந்த அளவுக்கு துடுக்கான பெண்..

ஒருமுறை மிக நீளமான வசனம் பேசி யோகிபாபுவை திட்டவேண்டிய காட்சியில் தடுமாறாமல் சீரியஸாக வசனம் பேசிக்கொண்டு இருந்தேன்.. திடீரென காமெடியாக ஒரு கவுண்ட்டர் கொடுத்தார் பாருங்கள்.. அவ்வளவுதான்.. அப்படியே ஜாமாகி நின்றுவிட்டேன்.. அதன்பிறகு சிரிப்பை அடக்கவே நீண்ட நேரம் ஆனது.

காட்சிகளில் பேசுவதை விட படப்பிடிப்பு இடைவேளை நேரத்தில் இன்னும் காமெடியாக பேசுவார் யோகிபாபு.. அதை நினைத்துக்கொண்டே ஷாட்டுக்கு சென்றால் சொதப்பி விடுவோம் என்பதால் எப்போதோ நடந்த ஏதாவது ஒரு கோபமான நிகழ்ச்சியை மனதில் நினைத்துக்கொண்டு யோகிபாபுவுடன் நடிக்கும் காட்சிகளில் சமாளித்தேன்” என்கிறார் ராஷ்மி..

கன்னடத்தில் தற்போது 'பாத்ரா' என்கிற படத்தில் நடித்து வரும் ராஷ்மி, தெலுங்கில் 'டப்பே டப்பு' என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். இதோ தமிழில் 'காக்டெய்ல்' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமல்ல சி.வி.குமார் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் 'வைரஸ்' என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மி. காக்டெய்ல் பட கதாபாத்திரத்திற்கு அப்படியே நேர்மாறாக இந்தப்படத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். கதாநாயகி என்பதை விட தனது திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் ராஷ்மி.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.