கோடம்பாக்கம் Corner
Typography

ரஜினி மீது வெறித்தனமான பக்தி கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரை குருவாக ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்து ரஜினியின் ரசிகர்களை தனது படங்களுக்கான பார்வையாளராக மாற்றிக்கொண்டவர்.

தமிழ் சினிமா ரசனையை தனது பேய் படங்களின் மூலம் எவ்வளவு மழுங்கடிக்க முடியுமோ அவ்வளவு மழுங்க அடித்து தனது படங்களில் பெண்களை பாலிர்ப்பு பிண்டங்களாக சித்தரிப்பதில் இவர் ஒரு சினிமா வியாபாரி. சமூக சேவை செய்வதுபோல காட்டிக்கொண்டு, தனது படங்களின் மூலம் கிடைக்கும் வசூல் வருமானத்துக்கு வருமான வரி விலக்கு பெறவே இவர் சமூக சேவை வேஷம் போடுகிறார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். ரஜினியை எதிர்ப்பதால் நாம் தமிழர் கட்சித் தலைவரான சீமானுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார் லாரன்ஸ்.

தற்போது ரஜினி மக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருப்பதால், மக்கள் மத்தியில் அந்தப் புரட்சியை ஏற்படுத்த கிளம்பிவிட்டதாக கூறியிருக்கிரார். இதுபற்றி குறிப்பிட்டிருக்கும் லாரன்ஸ், “ உங்களுக்கு தெரியும். என் தலைவரை போலவே எனக்கும் எந்த தேவையும் கிடையாது. எனக்கு அரசியல் தெரியாது. குரு ஒரு வழி காட்டியிருக்கிறார். அவர் வழி நடப்பதும், அந்த பாதையை பலப்படுத்துவதும் என் கடமை. கடமையை நிறைவேற்ற நாளை முதல் களமிறங்குகிறேன். மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும். "இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல!” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்