கோடம்பாக்கம் Corner
Typography

இந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து உரையாடியதன் பின்னதாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

ஊடக அறிக்கை TDS தொடர்பான குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்த நிதியமைச்சருக்கு நன்றி

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகளான எங்களை சந்தித்து, நாங்கள் அளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வருமான வரி பிடித்தத்தில் (TDS) நடப்பில் உள்ள பகிர்மான விகிதாச்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துரைக்கும் நினைவு பத்திரத்தை பெற்றுக் கொண்டதோடு, இது குறித்த எங்களது கருத்துகள், எண்ணங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்ட, மாண்புமிகு இந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு முதற்கண் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போதுள்ள நடைமுறையில் சில முக்கிய குறைகள் இருப்பதைப் புரிந்துக் கொண்ட நிதி அமைச்சர், உடனடியாக அதனை தீர்க்கும் விதமாக, திரைப்படத்துறையினரையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழு அமைத்திட உத்தரவிட்டார். திருமிகு. சுமலதா எம். பி, திருமிகு. பிரஹலாத் ஜோஷி, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர், திருமிகு. கே. ரகுராம கிருஷ்ண ராஜூ எம். பி., திரு. காட்ரகட்ட பிரசாத், திரு. ரவி கொட்டாரக்கரா, திரு. சி. கல்யான், திரு. டி ஆர். ஜெயராஜ், திரு. சா. ரா. கோவிந்து, திரு. ராக்லைன் வெங்கடேஷ், திரு. கே சி என் சந்திரசேகர், திரு. கே எல் தாமோதர் பிரசாத் ஆகியோரைக் உறுப்பினர்களாகக் கொண்ட இக்குழு, குறைகளை களைய தேவையான விஷயங்களை விவாதித்து, தீர்வை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

சந்திக்க வாய்ப்பு வழங்கி, எங்களது குறைகளைக் கேட்டும், அதனை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் உதவிய, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரைத்துறையினர் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக காட்ரகட்ட பிரசாத் தலைவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ரவி கொட்டாரக்கரா செயலாளர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்