கோடம்பாக்கம் Corner

நடிகர் ஜெய் ஆகாஷ் நல்ல தோற்றப்பொலிவு கொண்டவர். ஆனால், நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு நடிப்பவர். மோசமான கதையம்சமும் உருவாக்கமும் கொண்ட படங்கள் தமிழில் எடுத்து பணத்தை வீணாக்கி வருபவர். தொடர்ந்து பணத்தை இழந்து வந்தாலும் படம் நடிப்பதையும் தயாரிப்பதையும் விடாமல் செய்து வருபவர்.

தற்போது “அடங்காத காளை” என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் ரசிகர்கள் படம் பார்க்க A Cube எனும் புதிய செயல்திறன் கைபேசிக்கான செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது...

தற்போது “அடங்காத காளை” படத்தை நடித்து, தயாரித்து இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு அப்பா மகன் என இரு வேடங்கள். அப்பா ஒரு காவல்துறை அதிகாரி ஆனால் கெட்டவர். மகன் சாப்ட்வேர் என்ஞ்னியர் அவன் கெட்டவனா? நல்லவனா? என்பது ரகசியம். நடிகர் சாம்ஸ் எனது நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

அப்பா வேடத்திற்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடிக்கிறார். இசை UK முரளி செய்துள்ளார். ஒளிப்பதிவு சக்ரி செய்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிறது. தெலுங்கில் இப்படம் “அந்தால ராக்சஷடு” எனும் தலைப்பில் வருகிறது. இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் சென்னையிலும் 50 சதவீதம் ஹைதராபாத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தை வெளியிட ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம். இந்த ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும். வருகிற 18ந்தேதி எனது பிறந்த நாளன்று A Cube ஆப்பை வெளியிடுகிறோம். இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப்பில் வாராவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது.

இந்த ஆப்பின் சிறப்பு என்னவெனில் படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் பார்க்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வெளியிட இருக்கிறோம். எனது அடுத்த படம் “புதிய மனிதன்” தெலுங்கில் “கொத்தகா உன்னாடு” என்றும் வரும் படம் இந்த ஆப்பில் அடுத்து வெளியாகும்.

வேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த A Cube ஆப்பில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களது படமும் A Cube ஆப்பில் வெளியாகும். நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடும். ஆனால் இந்த A Cube ஆப்பில் நீங்கள் மிக குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் பார்க்க முடியும்.

அனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச்சிறந்த ஆப்பாக A Cube ஆப் இருக்கும்” என்று மூச்சு முட்ட பேசி முடித்தார். அடங்கவே அடங்காத நடிகர் இவர் என்பது மட்டும் நிச்சயம்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.