கோடம்பாக்கம் Corner
Typography

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் வலிகளையும் வேதனைகளையும் பேசிய தலித் சினிமாக்கள் தமிழில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன. இவற்றுக்கு நேரமாறாக சாதிய வன்மத்துடனும் துவேச உணர்வுடனும் எடுக்கப்பட்ட போட்டிப்படம்தான் ‘திரௌபதி’. அந்தப் படத்துக்கு உருவான எதிர்மறை விளம்பரம் மாபெரும் வெற்றிப் படமாக அதை ஆக்கிவிட்டது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் கதைக்களம் உருவாக்கிய சர்ச்சையின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. இதனிடையே கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழகத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ’திரௌபதி’ படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பதிவில், "கரோனா காரணமாக நேற்றுடன் திரையரங்குகளில் 'திரெளபதி' படக் காட்சிகள் முடிந்தன. 18 நாட்கள்... நூறு திரையரங்குகளில்... மாபெரும் சரித்திர வெற்றியாக மாற்றிய பெருமை உங்களையே சாரும்... பாதம் தொட்டு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். இனி அடுத்த பட வேலைகள் ஆரம்பமாகும். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு, ''வசூல் 15 கோடி ரூபாய் இருக்குமா? நிகர லாபம் 7-8 கோடி ரூபாய் இருக்குமா? விநியோகஸ்தர்கள் யாரும் நஷ்டம் அடையவில்லையே? சொல்லுங்கள் ப்ரோ'' என்று அவரை ட்விட்டர் தளத்தில் பின்தொடர்பவர் கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் மோகன்.ஜி, "விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். யாரும் அவர்களுடைய பணத்தை இழக்கவில்லை. சராசரியாக அனைவருக்கும் 3 மடங்கு லாபம் கிடைத்தது. ரியல் ப்ளாக் பாஸ்டர்" என்று தெரிவித்திருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்