கோடம்பாக்கம் Corner

மிகச் சாதாரண நடுத்தர பிராமணக் குடும்பத்தில் பிறந்து, இளங்கலை பொறியியல் படித்து முடித்து அமெரிக்கா சென்றுவிடும் கனவுடன் அப்ளிகேஷன் மட்டும் போட்டுவிட்டு, ஆட்களைப் பிடித்து அட்மிஷன் வாங்கத்தெரியாமல் கோட்டைவிட்ட அம்மாஞ்சியாகத்தான் இருந்தான் அந்த இளைஞன்.

பொறியியல் படிக்கமுடியாமல் போனாலும் அதனால் வருத்தப்படாமல் டிப்ளமோ படித்து, எதோ ஒரு சிறு தொழிற்சாலையில் மாதம் 600 ரூபாய்க்கு வேலைக்கு சென்றவன். அங்கே தொழிலாளர்கள் சங்கத்தி ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயிலுக்கு சென்று, தன் போக்கில் வாழ்ந்து, உதை வாங்கினாலும் எப்படியாவது "பெரிய ஆள்" ஆகி விடலாம் என்று கஞ்சா விற்க ஆந்திரா சென்றான்.

இருந்த பணத்தையெல்லாம் கோட்டைவிட்டு, திருப்பதியில் மொட்டைப்போட்டுக்கொண்டு அகோரப்பசியில் கிடைத்தவற்றை தின்று நடந்தே சென்னை வந்து வீடு சேர்ந்து..சின்ன பட்டாசு கடை நடத்தி நஷ்டப்பட்டு..சேலைகளை வாங்கி வீடு வீடாகச் சென்று விற்று எதுவும் முடியாமல்..அவர்கள் காலனியில் இருந்த தெலுங்கு மக்களுடன் சேர்ந்து நாளெல்லாம் ரியல் எஸ்டேட் செய்கிறேன் என்று சீட்டாட்டம் ஆடிக்கொண்டு சுற்ற...வீட்டின் ஒரே வருவாய் ஆதாரமாக இருந்த தனது தோப்பனாரில் உடல்நிலை பாதிக்கப்பட... வறுமை குடிகொண்டு ஒரே ஒரு வேளை மட்டும் சுக்காரொட்டிகள் தின்று, ஊர்சுற்றி ஒன்றும் முடியாமல் எதோ ஒரு நாடகக் கம்பெனியில் சாதாரண ஆபீஸ் பாய் வேலைக்கு சேர்ந்தான் அந்த கும்பகோணத்து இளைஞன்.

மோகன்லாலுடன் பழகிய நாட்களை மறக்க முடியாது ! - கோமல் சர்மா

சின்ன வயதில் இருந்தே தனக்கு இருக்கும் நடிப்புத் திறன், மிமிக்ரி ஆர்வத்தை அங்கே வெளிபடுத்தும்போது நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, அதை பயன்படுத்திக் கொண்டு அந்த நாடகக் கம்பெனியில் இருந்துக்கொண்டே தமிழ் சினிமாவில் மிகப்பெரும் காமெடி நடிகனாக உருவாகவேண்டும் என்ற லட்சியத்தை அந்த இளைஞன் வளர்த்துக்கொண்டான். நடிப்புத் திறமையயே முதலீடாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு கதவாக தட்ட யாரும் அவரை சீண்டியபாடு இல்லை..

இவர் காமெடியனாக நடிக்கும் நாடகத்தை ஒருமுறை பாக்யராஜும் ரஜினிகாந்தும் பார்க்க வருகிறார்கள்...எப்படியாவது அவர்களை நகைச்சுவை நடிப்பின் மூலம் கவர்ந்துவிட வேண்டும் என்று மெனக்கெட்டு, தான் நடிக்கும் காட்சி வருகைக்காக மேக்கப்புடன் காத்திருக்க..அந்த காட்சிக்கு முன்பாகவே அவர்கள் இருவரும் கிளம்பி சென்றுவிட சோர்ந்து போகிறார்.

மீண்டும் அதே நாடக கம்பெனியில் எடுபிடி வேலைகள் செய்து, சின்ன சின்ன காமெடிகளில் தலைகாட்டிக்கொண்டிருக்க ஒரு முறை இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன் நாடகம் பார்க்க வந்து, இவரது ஒன்லைனர் நகைச்சுவைகளால் கவனம் பெறுகிறார். நாடகம் முடிந்ததும் என்னுடைய அலுவலகத்தில் வேலை இருக்கிறது செய்கிறாயா?’ என்று அவர் கேட்க உடனே தலையாட்டி எப்படியாவது இவரது படங்களில் நடித்து மிகப்பெரும் காமெடியனாகி விட வேண்டும் என்று நினைத்து சென்றவருக்கு கிடைத்ததென்னவோ உதவி இயக்குனர் வேலை. அந்த வேலை பிடிக்காமல், சதா காமெடி நடிகனாகும் ஆசையிலேயே சுற்றிக்கொண்டு ஏனோதானோ என வேலை செய்ய, எஸ் ஏ சந்திரசேகர் ஒருநாள் இவரை கடுங்கோபத்தில் போட்டு வெளுக்க அன்றிலிருந்து மிகவும் ஷார்பான ஒரு ஆளாக உருவாகிறார்.

நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் !

படம் எடுக்கிறோமோ, இல்லையோ..தன்னிடம் இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு மாதாமாதம் முறையான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது எஸ் ஏ சந்திரசேகரனின் பாணி. எனவே இவருக்கு மாதாமாதம் சம்பளம் பிரச்சனையில்லை. அதுவும் இல்லாமல் எஸ் ஏ சி ஒரு பிஸியான இயக்குனராக ஓடிக்கொண்டிருக்க, இவரோ வீட்டின் வறுமையை கொஞ்சம் கொஞ்சமாக போக்க கிடைத்த வாய்ப்பாகவே அதை பார்க்கிறார். ஒரு இயக்குனர் ஆகும் ஆசையே இல்லாமல் உதவி இயக்குனர் வேலை தான் உலகில் மகத்தானது என்று நினைத்துக்கொண்டு அவர் காலம் தள்ள, எஸ் ஏ சந்திரசேகரனனின் ஆஸ்தான இணை இயக்குனராக உயர்கிறார். 16 படங்கள் அவரிடம் பணியாற்றி அனுபவங்களை அனுவனுவாகக் கற்றுக்கொள்கிறார்.

தனக்கு முன்பிருந்தவர்கள் தனக்கு பின்பு வந்தவர்கள் என அனைவருமே தனித்தனியாக சினிமா எடுக்க முயற்சிக்க, இவருக்கு மட்டும் அந்த ஆர்வம் வராமலேயே இருந்தது. அது தேவையும் இல்லை என்று நினைத்திருக்கிறார். காரணம் எஸ்ஏ சந்திரசேகர் கொடுத்த அரவணைப்பு. அடுத்து மாதாமாதம் கிடைக்கும் சம்பளம்..எக்காரணத்தை கொண்டும் அதை பாதகமாக்கிக்கொள்ள விரும்பியிருக்கவில்லை அவர். உடன் வேலை செய்த உதவி இயக்குனர்கள் இணை இயக்குநர் ஷங்கரை உசுப்பிக்கொண்டே இருக்க.. தானும் ஒரு இயக்குனராக முயற்ச்சிக்கவில்லையெனில் இந்த உலகம் மதிக்காது போல என்று நினைக்கிறார். இவருடன் வேலை செய்த பவித்ரன் படத்தை ஆரம்பிக்கிறார் அவருடைய படத்தில் இணை இயக்குனராக வேலை செய்து தனியாக வாய்ப்புகளும் தேடிக்கொண்டு இருக்க பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்.

‘தப்’ என்று கன்னத்தில் ஒரு அறை !

பள்ளி நாட்களிலிருந்தே சென்னை தியாகராய நகரில் உள்ள நடேசன் பார்க்கில் தான் எல்லாமே என்பதால், அங்கு தினமும் அமர்ந்துகொண்டே ஜென்டில்மேன் கதையை உருவாக்குகிறார்..எந்தெந்த தயாரிப்பாளர்களிடமோ வாய்ப்பை தேடி அலைய யாரும் கை கொடுக்காமல் துரத்தியடிக்க.. மீண்டும் தனது குருவிடமே சரண்டர் ஆகிவிடலாம் என நினைத்து அங்கே போக முடிவெடுக்கிறார். கடைசியில் இவர் ஏற்கனவே பவித்ரனுடன் வேலை செய்த இரெண்டு படங்களின் தயாரிப்பாளரான குஞ்சுமோன் இவரை அழைத்து வாய்ப்பு கொடுக்கிறார்.

தான் நிஜமாகவே ஒரு காமெடியன் அல்ல தான் ஒரு இயக்குனர் என்பதை அவர் அப்போதுதான் உணர்கிறார். ’ஜெண்டில்மேன்’ படத்தின் திரைக்கதையும் காட்சி அமைப்புகளும் ஷங்கர் எனும் மெகா பொழுதுபோக்கு இயக்குநரை தமிழ்சினிமாவுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் அடையாளம் காட்ட.. 350 கோடி பட்ஜெட்டில் ‘2.0’ எடுக்கிற அளவுக்கு தமிழ் சினிமாவின் ஒன் அண்ட் ஒன்லி பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயரை வென்று காட்டினார் ஷங்கர்.

1983-ன் ஆண்டின் உலகக் கோப்பையை மறக்க முடியுமா ?

காட்சிக் கற்பனையில் வியக்க வைக்கும் இந்த இயக்குநர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைந்துவிட்டன. அவரது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் விபத்து நேர்ந்திருந்தாலும் அவர் மீண்டு வரும் இயக்குநர். இந்தியா மொத்தத்தையும் தமிழ் சினிமாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர். அவரது கதை, சினிமாவில் சாதிக்க துடிக்கிறவர்களுக்கு பிரம்மாண்டமான தன்னம்பிக்கை பாடம்.

- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ரஜினி 45 என்றும் கமல் 61 என்றும் கொண்டாடும் ரசிகர்கள் 40 வருடங்களைக் கடந்து திரையுலகில் ஆட்சி செலுத்தும் பெண் நடிகர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.