கோடம்பாக்கம் Corner

தியேட்டர்களில் சொந்த புரஜக்டர் மற்றும் சர்வர்கள் வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே விவாதங்கள் நடைபெற்றன. ஏனோ இன்னும் அதுபற்றி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

தற்போதைய நிலைமையில் ஒரு தியேட்டரில் புரஜக்டர், சர்வர் மற்றும் பொருத்தும் செலவுகள் என்பது 1K 'E' Cinema வுக்கு 6 லட்சம் வரை செலவாகிறது. 2&4K 'D' Cinema 30 வரை செலவாகிறது. இந்த புரஜக்டர்களில் சாதாரண பல்புகளைப் பயன்படுத்தினால் 3-4 மாதங்களுக்கொரு முறை மாற்ற வேண்டும். அது 20 ஆயிரம் ரூபாய் வரை வரும் என்று கேள்வி.

அதேநேரம் லேஸர் லைட்டைப் பயன்படுத்தும்போது சில வருடங்களுக்குக் கவலையில்லை. ஔியின் தரமும் இறுதிவரை மங்காமல் இருக்கும். அதன் விலை சற்று அதிகம். ஆனாலும் இப்போது நிறையத் தியேட்டர்களில் லேஸர் லைட்டைத்தான் பயன்படுத்துவதாக அறிகிறேன். இப்போதை நிலவரப்படி மொத்தம் இருக்கும் 1100 திரையரங்குகளில் ஏறக்குறைய 800 தியேட்டர்கள் 'டி' சினிமா புரஜக்டர் மற்றும் சர்வர்கள் வைத்திருக்கிறார்கள். இவற்றில் சுமார் 225 தியேட்டர்களில் சொந்தமாகவும், மற்றவற்றில் கியூப் போன்ற நிறுவனங்களின் வி.பி.எஃப். முறையிலும் வைத்திருக்கிறார்கள்.

பாகுபலி பல்லாலதேவன் ராணா டகுபதி புது மாப்பிள்ளையாகின்றார் !

சொந்தமாக புரஜக்டர் வைத்திருக்கும் தியேட்டர்களுக்கு கியூப் நிறுவனம் தயாரிப்பாளர்களிடம் முதல் வாரத்தில் வசூல் செய்யும் ரூ. 11,000/- ஆயிரத்தில் ரூ. 2,500/- மட்டும் எடுத்துக் கொண்டு ரூ. 8,500/- ஐ தியேட்டர்காரர்களிடம் கொடுத்துவிடுவதாகவும், விளம்பர வருமானத்தை கியூபும், தியேட்டரும் பிரித்துக் கொள்வதாகவும் செய்தி.சொந்த புரஜக்டர்கள் இல்லாத தியேட்டர்களுக்கு விளம்பர வருவாயில் பங்கு கொடுப்பதில்லை. பராமரிப்புச் செலவு என்று கணக்கெழுதி கியூப் காரர்களே வைத்துக் கொள்கிறார்கள்.

எதிர்காலத்தில் மினி தியேட்டர்கள் வரும்போது, எல்லா தியேட்டர்களும் சொந்தமாக புரஜக்டர் மற்றும் சர்வர்களை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவைப் பெற வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை உறுதியாக வலியுறுத்தினாலோ, அல்லது அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கும் பட்சத்தில் யாராவது வழக்குத் தொடுத்தாலோ 'சி' ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இந்த விசயம் முடிவுக்கு வரலாம்.

போதையின் பாதையில் எனது பயணம் : மனம் திறந்த வெற்றிமாறன்

எப்படி நிறையத் தயாரிப்பாளர்களுக்கு சினிமா வியாபாரம் பற்றிப் புரிதல் சரிவர இல்லையோ, அதேபோல பல தியேட்டர்காரர்களுக்கும் அதனை லாபகரமாக நடத்துவது பற்றிய புரிதலும் இல்லை. இவற்றை இரண்டு சங்கங்களும் சரியான முறையில் ஆலோசனை வழங்கி நிர்பந்தப் படுத்த வேண்டும்.

எப்படி 80% படங்கள் பெரிய அளவு நஷ்டத்தைச் சந்திக்கிறதோ அதேபோல 60% தியேட்டர்களும் நஷ்டத்தைச் சந்திக்கின்றன.ஆனால், படத்துக்கும் தியேட்டருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. தியேட்டர் நடத்துவது நஷ்டமானால் அவர்களுக்குச் சொத்து என்ற ஒன்று இடமாக, கட்டிடமாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு கைக்குள் அடங்கும் 'ஹார்ட் டிஸ்க்' மட்டும்தான் மிச்சம். அதனை அடகு வைத்து ஒரு டீ கூட வாங்க முடியாது.

இது ‘ஜெண்டில்மேன்’ ஷங்கரின் உண்மைக் கதை !

விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்தல் நடைபெற்று அதிகாரத்திற்கு வரும் நிர்வாகம் கண்டிப்பாக சொந்த புரஜக்டர் விசயத்தையும், விளம்பர வருவாயில் தயாரிப்பாளருக்கான பங்கு வாங்குவதையும், புக் மை ஷோ போன்ற நிறுவனங்கள் அளவுக்கதிகமாக கொள்ளையடித்து சினிமாவைச் சீரழிப்பது பற்றியும் கையிலெடுத்து தீர்வு காணும். யார் வந்தாலும் இவற்றைச் செயல்படுத்த வேண்டியது மிக அவசியம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.