கோடம்பாக்கம் Corner

தமிழ் சினிமாவில் 44 ஆண்டுகளுக்கு முன் ‘அன்னக்கிளி’யின் மூலம் இளையராஜா என்ற  அந்த கிராமத்து இளைஞரின் பிரவேசம் நிகழ்ந்தது. அது அன்னக்கிளிக்குமுன் அன்னக்கிளிக்குப் பின் என தமிழ் திரையிசையை இரண்டாகக் கூறுபோடும் ஒரு இசைப் பிரவாகமாக அமைந்துபோனது.

ஆம்! அன்னக்கிளிக்கு முன்பு வரை, தமிழகத்தின் தேநீர் கடைகளிலும் ஈழத்தின் தேநீர் கடைகளிலும் அந்தக் கருப்பு வெள்ளைக் காவியங்களின் சங்கீத வாசனை குறையாத திரையிசைப் பாடல்களும் இந்தித் திரைப்படப் பாடல்களும் மட்டுமே கேட்டுகொண்டிருந்தன.

இந்திப் பாடல்களுக்கு இங்கே இனி இடமில்லை என அவற்றை ரயிலேற்றி, மும்பைக்கே அனுப்பி விட்டு, நம்மூரின் இசையை நாம் கேட்கச் செய்த வகையில், அன்னக்கிளி, சரித்திர முக்கியத்துவம் இளையராஜாவின் எளிய, ஆனால் அசைக்கமுடியாத அஸ்திவாரமாக தமிழ்த் திரையிசையில் அழுந்தத் தடம் பதித்தது.

அந்த இசையின் தொடக்கத்தை, அன்னக்கிளியின் அனுபவத்தை  கீழே கானொளியாகக் காணலாம் :

 

உலகை உலுக்கும் கொரோனா தொற்று எப்போது முடியும் எனும் விரிவான பார்வை கீழே.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

திரைக்கதை திலகம் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் 1980-களில் வெளியானது. அந்தப் படம் வெளியான பிறகு, சீண்டுவாரில்லாத முருங்கைக்காய் விற்பனை தமிழகம் முழுவதும் ஏற்றம் பெறத் தொடங்கியது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.