கோடம்பாக்கம் Corner

தமிழ் சினிமாவில், கமல் - ரஜினியின் நட்பு எத்தனை புகழ்பெற்றதோ, அதேபோல், அஜித் - விஜயின் நட்பும் நீரூ பூத்த நெருப்பு என்றால் அது மிகையில்லை. கமல் - ரஜினி இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்வார்கள். ஆனால், அஜித் - விஜய் இருவரும் மேடைகளில் இணைந்து கலந்துகொள்ளமாட்டார்கள்.

தேவைப்படும்போதெல்லாம், ஃபோன் வழியே பேசிக்கொள்வார்கள் என்று, அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவும், விஜயின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமதுவும் நம்மிடம் தெரிவிக்கிறார்கள். இப்படி சமீபத்தில், விஜயுடன் பேசி, அஜித் ஆறுதல் கூறியது, விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றபோது நடந்தது.

அதேபோன்று, அஜித்தும் விஜயும் தங்கள் குடும்ப விழாக்களில் அழைப்பின் பேரில் கலந்து கொள்வதிலும், தங்கள் நட்பைக் காப்பாற்றி வருகிறார்கள். ‘குட்டித் தல’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும், அஜித்தின் மகன் ஆத்விக்கின் ஒவ்வொரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கும், விஜய் - சங்கீதா தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு வருகின்றனர். அதேபோல, ஷாலினி கிறிஸ்தவராக இருந்தபோதும், விஜய் ஆண்டுதோரும் கொடுத்துவரும் ஈஸ்டர் குடும்ப விருந்தில் கலந்துகொள்ள, அஜித் - ஷாலினி தம்பதி குடும்பம் சகிதமாகக் கலந்துகொண்டு வருகிறார்கள்.

தல - தளபதியின் இந்தப் பிணைப்பு, அவர்களது ரசிகர்களுக்கு நன்கு தெரியும் என்றாலும், பல தெரியாத விஷயங்களைக் கண்டறிந்து தர விரும்புகிறது 4தமிழ்மீடியா. கானொளியைக் காணுங்கள்

தல -தளபதி பற்றிய இன்னும் பல உண்மையான தகவல்களை, காணொளி வடிவில் கண்டும் கேட்டும் மகிழ 4தமிழ் மீடியாவின் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். பெல் பட்டனை அழுத்தி, புதிய வீடியோக்களின் அறிவிப்பைப் பெறுங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.