கோடம்பாக்கம் Corner

சைக்கோ படத்திற்குப் பின், மிஸ்கின் இயக்குவதாக இருந்த துப்பறிவாளன் 2 திரைப்படம், விஷாலுடன்  ஏற்பட்ட  கணக்கு வழக்குக் குழறுபடிகளால்,  மிஷ்கினின் கைவிட்டுப்போனது. தற்போது நிலவி வரும் ஊரடங்கு காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் மிஷ்கின்.

அதுதான் மிஷ்கினின் அலுவலகம். அவரது அலுவலகத்தில் நான்கு அறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, மிஸ்கினின் நூலகம் உள்ள அறை. அது அவருடைய மாஸ்டர் அறையாகவும் இருக்கிறது. அங்கேயே படித்து, அங்கேயே தூங்கி, அங்கேயே சாப்பிட்டு, தன்னை தனிப்பைப்படுத்திக் கொள்வதில், ‘தான் ஒரு தனிமை ஓநாய்’ என்றும், கருணை நிரம்பி வழியும் ஒரு சைக்கோவும்தான்’ என்று, தன்னைத் தானே விமர்சித்துக் கொள்ளும் துணிவு,  மிஷ்கினுக்கு எப்போதும் உண்டு.

 ‘சைக்கோ என்பது கோரமல்ல;  ஞானநிலை’, அது மற்றவர்களுக்கு தீங்கு செய்யும் மனிதத் தன்மையைக் குறிப்பதாக, உலகமும், சினிமாவும் நம்புவதை மிஷ்கின் நம்பத் தயாராக இல்லை. மனநல மருத்துவர் ருத்ரனே கூட, மிஷ்கினின் ‘சைக்கோ’ பட அணுகுமுறையை அந்தப் படத்தில் கண்டு, ருத்ரத்  தாண்டவ ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் யாரும் கையாளத் தயங்கும் கருத்துகளைக் கூட, மிஷ்கின் துணிந்து கையாளும் காரணம் என்ன..? கானொளியில் காண்க;

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.