கோடம்பாக்கம் Corner

மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்த பொது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார். ‘அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?’ என்று கேட்டேன். அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன்... ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்’ என்றார் !

சரி உட்காருங்க...! 'சின்னவர் வெளிய வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன். சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்ப வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு, ‘இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும்’ என்று சொல்லி விட்டு, காரில் ஏறிச் சென்றுவிட்டார். அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல் தவிப்புடன் நின்றார். "இருந்து சாப்பிட்டுவிட்டு போகச் சொன்னாருல்ல, மதியம் சாப்டுட்டு போங்க " என்றேன்."நான் எப்படிச் சாப்பிடுவது..என் குடும்பமே பட்டினியா இருக்கும் போது?” என்றார் அவர்.

48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் : கார்த்திக் - ஜெஸ்ஸி காதல் செய்யும் மாயம் !

“நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன், அத வச்சு சமாளியுங்கள்' என்றேன். சந்தோஷப்பட்டார். மதியம் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து விட்டார். அந்த நடிகரிடம், மதியம் திரும்ப எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப் போங்க..என்றேன். "சரி.." என்றார்.

வெளியே வந்த எம்ஜிஆர் அவரைப் பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா? " என்று கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார். அந்த நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார் மீண்டும் நின்றது. எம்ஜிஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார். அவர் காருக்கு அருகில் சென்று சற்று தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார். அவரும் காருக்கு மிக அருகில் போய் நிற்க, சட்டென்று அவருடைய பாக்கெட்டில் ஒரு கவரை யாருக்கும் தெரியாமல் எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனன் கூட்டணி !

அவர் என்னருகே வந்து கவரைப் பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்விட்டது. அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட எனக்குத்தான் அதிக சந்தோஷம். மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்..

‘கஷ்டத்துல வந்த அந்த நடிகரை சாப்பிடச் சொன்னீங்க, ஆனா அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட கேட்காம போயிட்டீங்க.. திரும்ப மதியம் வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க. அந்த நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு. இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா வச்சு அனுப்புறீங்க.. ஏன் அண்ணே அப்படிச் செஞ்சீங்க..?’ என்று கேட்டேன்.

இத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.

சில கணங்கள் என்னை அமைதியாகப் பார்த்துவிட்டு அவர் சொன்னார். "எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக் கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்படுவார். அவரா கேட்டா கம்மியாத் தான் கேட்டிருப்பார். அதனால் தான் நம்மளா கொடுத்திடனும்..." என்றார். எனக்குத்தான் இப்ப கண்கலங்குச்சு. அவருடைய கொடை உள்ளம் பற்றியும் அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த ஈகை இயல்பு பற்றியும் இருவேறு கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை. அதனால் தான் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

- முதுபெரும் நடிகர் வீரப்பன் அளித்த பேட்டி ஒன்றிலிருந்து.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.