கோடம்பாக்கம் Corner

கேரளாவில் படப்பிடிப்புக்காகப் போடப்பட்டிருந்த தேவாலய செட்-டை சில வலது சாரி அமைப்புகள் சேர்ந்து இடித்துத் தள்ளிவிட்டன. இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்குப் போய் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் 'மின்னல் முரளி' படத்துக்காக கேரளாவின் காலடி பகுதியில், பெரியார் ஆற்றங்கரையில், உரிய அனுமதி பெற்ற பின் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலய அரங்கு அமைக்கப்பட்டிருந்துச்சு. ஆனா இந்த அரங்குக்கு எதிரிலே மகாதேவன் கோயில் இருந்ததால், இந்த சர்ச் அமைப்பதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் அந்த்ராஷ்டிர இந்து பரிஷத் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரி தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு அவுஸ்திரேலியாவைத் தீவிரமாக துவம்சம் செய்து வரும் மங்க்கா புயல்!

இத்தாலிய அதிகாரிகள் 60,000 பேர் கொண்ட தன்னார்வ தொண்டு அணி உருவாக்க ஆலோசனை !

மேலும், "கொடுத்த புகார்கள் எதுவும் பலனளிக்கவில்லை. நமக்குக் கெஞ்சும் பழக்கம் இல்லை என்பதால் இடிக்க முடிவெடுத்தோம். தன்மானம் காக்கப்பட வேண்டும். இதை இடித்த அனைத்து ராஷ்ட்ரிய பஜ்ரங் தள தொண்டர்கள் மற்றும் அமைப்பின் மாநிலத் தலைவருக்கு மகாதேவன் அருள் புரிவார்" என்று ஹரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இப்போது போட்ட செட் இடிபட்ட நிலையில் 'மின்னல் முரளி' படத்தோட டைரக்டர் பேஸில் ஜோசஃப், "சிலருக்கு இது நகைச்சுவையா, விளம்பரமா, அரசியலா இருக்கலாம். ஆன எங்களுக்கு இது கனவு. கூடவே வாழ்க்கை.. ஊரடங்குக்குச் சற்று முன்புதான் அந்த அரங்கம் அமைக்கப்பட்டது. இந்தப் படம் சாத்தியப்பட இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தோம், பாடுபட்டோம். கலை இயக்குநரும் அவரது அணியும் பல நாட்கள் உழைத்து இந்த அரங்கத்தைக் கட்டினாங்க. தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு உழைத்த பணம் செலவு செய்யப்பட்டது. தேவைப்பட்ட அனுமதி அனைத்தும் பெற்ற பின்தான் இந்த அரங்கம் அமைக்கப்பட்டது. எல்லோரும் ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய இந்த வேளையில் அந்த அரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் என என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாகக் கேரளாவில். இதுகுறித்து நான் அதிர்ச்சியும், கவலையும் கொண்டுள்ளேன்" என்று பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் நம் வாழ்வில் மறைந்துவிடாது : சுவிஸ் தொற்று மையத் தலைவர்

கோவிட்-19 எமது ஆய்வுகூடத்தில் இருந்து பரவவில்லை! : வுஹான் மருத்துவ ஆய்வு கூடம்

விசயம் வெளியே தெரிந்துவிட்ட நிலையில் கேரளாவில் மதவாத சக்திகள் விளையாட முடியாதென்றும், அரங்கை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பெரும்பாவூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்குது. நாயகன் டொவினோ தாமஸ், தயாரிப்பாளர் சோஃபியா பால், கேரள திரைப்பட ஊழியர்கள் சங்கம், நடிகை ரீமா கல்லிங்கல், இயக்குநர்கள் ரஞ்சித் சங்கர், ஆஷிக் அபூ, நடிகர் அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து