கோடம்பாக்கம் Corner

வெள்ளிவிழா படமான ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் வேலைகள் தொடங்யிருக்கும் இந்தச் சமயத்தில் ஒரிஜினல் வெர்சன் உருவான காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அற்புதமான நினைவு கூறல் அல்லவா?

‘70-ஆண்டுகளில் ஏவி.எம்’ நூலில், அந்தப் படத்தைத் தயாரித்த வெள்ளைச் சட்டை வேந்தர் ஏவி.எம்.சரவணன் தனது நினைவுகளைப் பகிர்ந்திருப்பதிலிருந்து கொஞ்சம் நம் வாசகர்களுக்காக இங்கே...

“இசையில் நல்ல திறமைகொண்ட பாக்யராஜுடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தவர் இசைஞானி இளையராஜா. அவரது இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. அதே போல் படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசை கூட அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

ராஜா ரசிகர்களுக்குத் தந்திருக்கும் பிறந்த நாள் பரிசு!

படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகளின் போது, ‘இந்தப் படத்திற்கு சங்கர்–கணேஷை இசையமைக்க வைக்கலாம்’ என்று என்னுடைய மூத்த சகோதரர் ஏவி.எம்.குமரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் பாக்யராஜ், ‘இல்லை சார்.. இந்தப் படம் பெரிய அளவில் வரப்போகிறது. எனவே இளையராஜா சாரை கேளுங்கள்’ என்று கூறிவிட்டார்.

இதையடுத்து நான், இளையராஜாவுக்கு போன் செய்து, ‘உங்களைப் பார்க்க வேண்டும்’ என்று கூறினேன். அவரும் உடனடியாக என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம், ‘நாங்கள் பாக்யராஜை வைத்து ஒரு படம் பண்ணுகிறோம். அந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும்’ என்றேன். நான் சொன்ன மறுநொடியே என்னை கையெடுத்து கும்பிட்டவர், ‘என்னை விட்டுடுங்க சாமி.. அந்த ஆளுக்கு நான் மியூசிக் போட மாட்டேன். வேறு யாரையாவது வைத்து மியூசிக் போடுங்கள். வேறு எந்த படமாக இருந்தாலும் நான் பண்றேன். இந்தப் படத்திற்கு மட்டும் பண்ண மாட்டேன்’ என்று கூறி மறுத்து விட்டார்.

பாலு மகேந்திராவை மறக்க முடியவில்லை! : நடிகர் சசிகுமார் மனம் திறந்த கடிதம்

ஏற்கனவே வேறு ஒரு படத்தில் இளையராஜாவுக்கும், பாக்யராஜூக்கும் இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பது பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது. மறுநாள் காலையில் பாக்யராஜ் வந்ததும், இளையராஜா என்னிடம் சொன்னதை அவரிடம் கூறினேன். அதைக் கேட்ட பாக்யராஜ், உடனடியாக பிரசாத் ஸ்டூடியோ சென்று, இளையராஜா அறையின் வாசலில் போய் நின்றிருக்கிறார். அவரைப் பார்த்ததும் இளையராஜா, அந்த அறையில் இருந்து மேலே உள்ள அறைக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் கூட மதியம் வரை அறையின் வாசலிலேயே நின்றிருக்கிறார் பாக்யராஜ். மதியம் இளையராஜா அறையை விட்டு வெளியே வந்ததும், அவரிடம், ‘இந்தப் படத்திற்கு நீங்க தான் இசையமைக்க வேண்டும்’ என்று சமரசம் பேசியிருக்கிறார்.

மேற்கொண்டு மறுக்க முடியாத இளையராஜா, மறுநாள் என்னிடம் வந்தார். ‘அவர் என்னை சமாதானப்படுத்தி விட்டார். அதனால் இந்தப் படத்திற்கு நான் இசையமைக்கிறேன்’ என்று கூறினார். சினிமாத் துறையைப் பொறுத்தவரை இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது சகஜமான ஒன்று. ‘முந்தானை முடிச்சு’ படத்திற்குள் இளையராஜா வந்தபிறகு அவரது பணி மெச்சத் தகுந்ததாக இருந்தது. படத்திற்கு மிகச் சிறந்த முறையில் இசை அமைத்துக் கொடுத்தார். இப்போது கூட சிலர், ரீ–ரெக்கார்டிங் பணிக்காக 15 முதல் 20 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இளையராஜா தன்னுடைய ரீ–ரெக்கார்டிங் பணியை 4 முதல் 5 நாட்களுக்குள் முடித்துவிடும் திறமைசாலி.

பக்தியில் சிறந்த இளையராஜா பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார். கடைசி 4 ரீல்களுக்கு ரீ–ரெக்கார்டிங் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அன்று இரவு இளையராஜா, திருவண்ணாமலை புறப்படுவதாக இருந்தார். மாலை 6 மணிக்கு கொஞ்சம் ஓய்வு எடுத்தபோது, ‘ராஜா! இன்னும் 4 ரீல் இருக்கு. முடிக்க முடியுமா? என்ன பண்ணப் போகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எப்போதும் இளையராஜா உள்ளே உட்கார்ந்து ‘மிக்சிங்’ பார்ப்பார். கோவர்தன் வெளியே இருப்பார். அன்று கோவர்தனை ‘மிக்சிங்’ பார்க்கச் சொல்லி குறிப்புகளை கொடுத்து விட்டு, இளையராஜா போய் ரீ–ரெக்கார்டிங் பணியை கண்காணிக்கத் தொடங்கிவிட்டார். கடைசி 4 ரீலும் இரவு 9.15 மணிக்குள் முடிந்துவிட்டது. இடையில் எந்த ஒரு ஓய்வும் எடுக்கவில்லை. முடிக்க வேண்டும் என்பதற்காக ஏனோதானோ என்று முடிக்கவில்லை. மிகப் பிரமாதமாக ரீ–ரெக்கார்டிங் பணியை முடித்துக் கொடுத்திருந்தார். இந்த அளவுக்கு செய்வதற்கு இளையராஜாவை விட்டால், வேறு ஆள் கிடையாது. அதனால்தான் நான் முன்பே சொன்னேன், ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு பாக்யராஜூக்கு அடுத்தபடியாக பாராட்டத் தகுந்தவர் இளையராஜா தான்.


படத்தில் ஐந்து பாடல்கள்தான். ஆனால் கேசட்டில் ஆறு பாடல்கள் இருக்கும். இளையராஜா டைட்டில் பாடல் பாடினால், படம் நன்றாக ஓடும் என்று ஒரு சென்டிமென்ட் இருந்தது. அதனால் ஒரு பாடலைச் சேர்த்தோம். சமீபத்தில் மறைந்த நா.காமராஜ் ‘விளக்கு வச்ச நேரத்திலே..’ என்ற பாடலை எழுதிக்கொடுக்க, அதனை இளையராஜா பாடினார். ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது பல சுவாரசியமான வி‌ஷயங்களும் நடைபெற்றன. இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் கோபிச்செட்டிப்பாளையம் அருகில் உள்ள ஓலப்பாளையம் என்ற இடத்தில்தான் நடந்தது. அங்கிருந்த பள்ளிக்கூடத்தின் அருகில் பாக்யராஜ் தன் குழந்தையுடன் தங்கியிருப்பதைப் போல் வரும் வீட்டை, புதியதாக கட்டினோம். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த வீட்டை, பள்ளிக்கூடத்தின் வகுப்பறைகளில் ஒன்றாக பயன்படுத்திக்கொள்ளும்படி கொடுத்துவிட்டோம். இந்தப் படத்தில் வரும் சில கதாபாத்திரங்களுக்கு, பாக்யராஜ் அந்த ஊரில் இருந்தவர்களில் சிலரையே பிடித்து நடிக்க வைத்தார்.இப்படி ‘முந்தானை முடிச்சு நினைவுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்” என்று விவரித்துச் செல்கிறார் ஏவி.எம்.சரவணன்.

புகைப்படக் குறிப்பு: புகைப்படக் கலைஞர் ‘ஸ்டில்ஸ் ரவி’ எடுத்த அபூர்வப் புகைப்படம். பிரசாத் ஸ்டுடியோவில் காத்திருந்து இளையராஜாவைச் சந்திக்கிறார்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.