கோடம்பாக்கம் Corner

நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.

அந்த படத்தின் படப்பிடிப்பு இடைவேளைகளில் விக்னேஷ் சிவனிடம், ‘போடா போடி’ படப்பிடிப்பில் நடந்த கதைகளை நயன்தாரா கேட்க, அதுதான் சாக்கென்று ‘சிம்பு எப்படியெல்லாம் தன்னை கொடுமைப் படுத்தினார் என்பதை விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் கொட்டிக் குமுறித் தீர்த்துள்ளார். அதனால் விக்னேஷ் சிவன் மீது அனுதாபம் பிறந்து அது காதலாக மாறிவிட்டது என்கிறார்கள் நயன்தாராவிற்கு நெருக்கமானவர்கள்.

நயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல!

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்த காதல் உலகுக்கே தெரியும்படி, தினசரி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து எடுத்துக்கொள்ளும் விதவிதமான செல்ஃபி படங்களை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டிபோட்டு இருவருமே வெளியிட்டு வந்தார்கள். லிவிங் டுகெதர் முறையில் இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தாலும், முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை.

' மீண்டும் எழுவோம் ' - கொரோனா ஊரடங்கைப் பற்றிய பரத்பாலாவின் புதிய முயற்சி - அரிய காட்சிப் பதிவுகள் !

இதனால் ஊடகங்களின் கிண்டலுக்கும் ரசிகர்களின் ட்ரொலுக்கும் தொடர்ந்து ஆளாகி வந்தார்கள். தற்போது ஒருவழியாக முறைப்படி திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். வரும் நவம்பர் மாதம் இரு தரப்பு குடும்பத்தார் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ள இந்த நட்சத்திரக் காதலர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இதை விரைவில் தங்கள் சமூக வலைதள பக்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இருக்கிறார்கள்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்