கோடம்பாக்கம் Corner

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

இவருக்கும் இயற்கைக்கும் நிறைவே தொடர்பு இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த கன்னடர் என்றாலும் ‘சந்தனக் கடத்தல் வீரப்பன் உருவாக இருமாநில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தான் காரணம். இயற்கை வளங்களை அழித்து லாபம் பார்க்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கும் வரை வீரப்பன்கள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள்’ என்று துணிந்து கூறியவர். மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ... மலை வளம், வன வளம் மீது அவருக்கு அளப்பறிய பற்று உண்டு. பெங்களூருவிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இவர் பிறந்த வளர்ந்த கரியப்பனைதொட்டி என்ற கிராமம். கரியப்பனைதொட்டி என்றால் கரிய நிறமுடைய பனை மரங்கள் அடர்ந்த சிறு நீர்க்குட்டைகள் கொண்ட கிராமம் என்று பொருள். கன்னட மொழியில் தொட்டி என்றால் சிறு குட்டை எனப் பொருள்.

அப்பா மகன் அதிசய கூட்டணி

கொரோனா ஊரடங்கால் தற்போது கிஷோர் தனது மனைவி மகன்களுடன் வசிப்பது கரியப்பனைதொட்டியில் தான். பனியனும் அரைகால் சட்டையும் அணிந்துகொண்டு, கையில் மண்வெட்டியுடன் விவசாய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் கிஷோர். பாரம்பரியமான நாட்டு மாடுகளைப் ஏரில் பூட்டி மரக் கலப்பையால் நிலத்தை உழுது விவசாயம் செய்கிறார். விவசாய வேலைகளை தனது மகன்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார். இயற்கை விவசாயத்தின் மீது காதல் கொண்ட கிஷோர், படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும் மனைவி விஷாலாவுடன் இணைந்து இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

காதல் மன்னனின் பிரம்மாண்ட சமூக சேவை!

வீடு, தோட்டம், வயல் என எட்டு ஏக்கரில் இவரது இயற்கை விவசாயம் கன ஜோராக நடக்கிறது. செம்மன் பூமி. வீட்டுக்குத் தேவையான உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட் ஆகியவற்றை இவர்களது நிலத்திலேயே விளைவிக்கிறார். சினிமா தொழிலுக்கு மத்தியில் எப்படி இவரால் இயற்கை விவசாயம் செய்ய முடிகிறது. “ எனது பெற்றோர்கள் செய்த தொழில் தானே.. அதனால் கஷ்டமாக இருக்கவில்லை” எனும் கிஷோர் வயலில் இறங்கி வேலை செய்யும் நாட்களில் உடற்பயிற்சியைத் தவிர்த்துவிடுதாகச் சொல்கிறார். மண்ணின் கலைஞன் என்பார்கள். கிஷோர் விஷயத்தில் அது எத்தனை சரியாக இருக்கிறது.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து