கோடம்பாக்கம் Corner

ஆளை அடிக்கும் உயரமும் அசரடிக்கும் தோற்றமும் கொண்டவர். பல படங்களில் நடித்திருந்தாலும் பிரகாஷ்ராஜ், த்ரிஷாவுடன் இணைந்து நடித்த் ‘அபியும் நானும்’, ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்’, ஜீவாவுடன் இணைந்த நடித்த ‘கோ’ ஆகிய படங்களில் தனித்து தன்னை நிரூபித்தார் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.

பின்னர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது மென்மையான குணத்தின் மூலம் நேயர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இவருக்கும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் டிவி நடிகையுமான நிஷாவுக்கும் காதல் மலர்ந்து இருவீட்டார் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சமைரா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.

விஜய் தரப்போகும் பிறந்தநாள் சர்ப்பிரைஸ்!

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவி நிஷாவின் சொந்த ஊரானா தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சின்னமனூருக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றுவிட்டதை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கிராமத்திலும் சுற்று வட்டாரங்களிலும் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்பதால் தனது மனைவி நிஷா டிவிஎஸ் xL என்ற கிராமமக்கள் அதிக அளவில் ஓட்டும் எளிய மோட்டர் சைக்ளை ஒட்ட, பின்னல் அமர்ந்து ஊரையும் வயற்காட்டையும் மகிழ்ச்சியுடன் சுற்றுவரும் புகைப்படத்தைப் பதிவிட்டு “சின்ன சின்ன சந்தோஷம் தான் வாழ்க்கை; இதுபோல சின்ன பைக்கை மனை ஓட்ட, பின் சீட்டில் அமர்ந்து நிஷா அவரது சின்னமன்னூர் கிராமத்தை சுற்றி காட்டுவது இதுவரை கிடைக்காத சந்தோஷம்’ என்று கூறியிருக்கிறார்.

தனுஷ் வெளியிடும் ‘ஜெயில்’ பாடல்!

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்