கோடம்பாக்கம் Corner

மீம் கலாச்சாரம் தொடங்கும் முன்னர் தமிழ்ச் சமூக ‘வாழப்பழக் காமெடி’யை வைத்தே அனைத்துக்கும் ஜல்லி அடித்துக்கொண்டிருந்தது. அதேபோல ‘சொப்பன சுந்தரி’ காமெடி கொஞ்சம் தாமதமாக பிரபலமானது.

அப்படிப்பட்ட இரண்டு பெரிய ‘அடையாள’ நகைச்சுவைகளைத் தாண்டி, இளையராஜாவின் பாடல்களுக்காகவும் கவுண்டமணி - செந்தில் ஜோடியின் நகைச்சுவைக்காவும் 350 நாட்கள் ஓடிய ‘கரகாட்டக்காரன்’ படம் வெளியாகி 30 வருடங்கள் ஓடியே விட்டன.

பச்சிலையும் திருநீறும்

பசுநேசன் ராமராஜன், கிராமத்துக் கிளி கனகா ஜோடியுடன் வடிவுக்கரசி - சண்முகம் இடையிலான அண்ணன் தங்கை பாசமும் படத்தில் உண்டு. அந்தப் படத்தின் இயக்குநர் கங்கை அமரன் படத்தை வெரும் 18 லட்ச ரூபாயில் தயாரித்தார். தம்பி கங்கை அமரனுக்காக படத்தின் அத்தனை பாடல்களையும் ஹிட்டாக வழங்கினார். இளையராஜா இசையில் ‘முந்தி முந்தி விநாயகனே’, ‘மாங்குயிலே பூங்குயிலே’, ‘குடகுமலை காற்றில்’, ‘இந்த மான் உந்தன் சொந்த மான்’, ‘ஊருவிட்டு ஊரு வந்து’ என்று எல்லாப் பாடல்களும் பட்டிதொட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின. கரகாட்டக்காரன் படம் மீண்டும் மீண்டு திரையரங்குகளில் வெளியாகிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை படம் வெளியாகும்போதும் முறுக்கு, கடலைமிட்டாய், குளிபானங்கள் என்றெல்லாம் முன்னதாகவே வாங்கிவைப்பார்கள். ‘கரகாட்டக்காரன்’ ஓடிய தியேட்டர்களில் இன்னொன்றையும் மறக்காமல் தயாராக வைத்திருந்தார்கள். அது... வேப்பிலை!

ஆமாம்! உச்சக்கட்டக் காட்சியில் வரும் ‘மாரியம்மா மாரியம்மா’ பாடலுக்கு, அங்கிருந்தும் இங்கிருந்துமாக பெண்களும் ஆண்களும் சாமியாடினார்கள். அவர்களை சாந்தப்படுத்த வேப்பிலையும் விபூதியும் தயாராக வைத்திருந்தார்கள் தியேட்டர்காரர்கள். மொத்தம் 425 நாட்கள் ஓடி ராமராஜனுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த கரகாட்டக்காரன் மதுரையில் 350 ஓடி சாதனை படைத்தது.

இன்னும் ரசிக்கப்படும் ‘வாழைபழம்’

கவுண்டமணி, செந்தில் கூட்டணி மற்றும் கோவை சரளாவுடன் இணைந்த காமெடிகள் இப்போதுவரை பிரபலமாக இருக்கின்றன முக்கியமாக, வாழைப்பழக் காமெடியை 30 வருடங்கள் கழித்து தலைமுறை தாண்டியும் இன்னும் ரசிக்கிறார்கள். கரகாட்டக்காரனின் இந்த வெற்றியைப் பற்றி கங்கை அமரன் தனது நினைவுகளில் இருந்து பேசும்போது: “ கரகட்டாக்காரன் படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால், இருபது லட்சத்துக்குள்ளேதான் இருக்கும். வியாபாரம் பெரிதாக இல்லை. அப்போது ‘அண்ணனுக்கு ஜே’ என்று ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தோம். ‘கரகாட்டக்காரன்’ படமும் எடுத்துக் கொண்டிருந்தோம். ’கரகாட்டக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘படம் கிராமத்துக் கதையா இருக்கு, ஆட்டமும் பாட்டுமா இருக்கு’என்று ஏதேதோ காரணங்கள் சொல்லி, விலையைக் குறைப்பதில் குறியாக இருந்தார்கள். எங்களுக்கும் இந்தப் படம் அப்படி ஓடும் இப்படி ஓடும் என்ற பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. படம் ஜாலியா இருக்கு, பொழுதுபோக்கா இருக்கு. மக்கள் ரசிக்கிற மாதிரி இருக்குன்னுதான் நினைச்சோம். இவ்வளவு பெரிய சக்ஸஸ் ஆகும்னு தெரியலை.” என்று நிறுத்தி மூச்சு விட்டுக்கொண்டார்.

ரஜினிக்கும் கமலுக்கும் இல்லாத ஓபனிங்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“கரகாட்டக்காரன் படத்துக்கு ரஜினி, கமல் படங்களுக்கு இணையான ஓபனிங் கிடைச்சது. ரஜினி சார், எங்களுக்கு ‘ராஜாதி ராஜா’ பண்ணினார். அப்போது வந்து, ‘எப்படி சாமி, இந்தக் கதையை திங்க் பண்ணினீங்க’ என்று கேட்டார். ‘இதுல திங்க் பண்றதுக்கு என்னங்க இருக்கு? எங்க ஊர்ல கரகாட்டம் ஆடிக்கிட்டிருப்பாங்க. அவங்க லைஃப் எப்படி இருக்கும்னு கதை பண்ணினோம். அவ்ளோதான்’ என்றோம்.

பொதுவாகவே, கரகாட்ட கோஷ்டி என்றில்லை. சங்கீத குரூப், டிராமா குரூப் எல்லாமே ஜோக் அடித்துக்கொண்டு, ஜாலியாக இருப்பவர்கள்தான். எப்போதும் கேலியும் கிண்டலும் நக்கலும் எனப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதனுடைய உச்சம், கரகாட்டக்காரர்கள்தான். அதையெல்லாம் வைத்துக் கொண்டு பண்ணியதுதான் ‘கரகாட்டக்காரன்’ படம். இந்த டைட்டில்தான் முடிவு பண்ணினோம். அப்படியே வைத்தோம். படத்தைப் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள், அதைப் பற்றிச் சிலாகித்துப் பேசிப்பேசியே அந்தப் படத்துக்கு வாய்மொழி விளம்பரத்தை அள்ளித் தந்தார்கள். படத்தைப் பற்றியும், அதன் இசையைப் பற்றியும் பாடலைப் பற்றியும் நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றியும் குறிப்பாக வாழைப்பழ காமெடியையும் ஆராதித்த ரசிகர்களால் பின்னர் அந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியை நோக்கிச் சென்றது. ரசிகர்கள் படத்தைத் திரும்பப் பார்த்தார்கள். திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். மூன்றாம் நாள் பார்த்துவிட்டு, முப்பதாம் நாள் திரும்பவும் பார்க்கப் போனவர்கள், படம் பார்க்க முடியாமல், ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டை மட்டும் பார்த்துவிட்டு வந்தார்கள்.” என்று கூறும்போதும் அவரது முகத்தில் நூறாவது நாள் படவிழாவில் அவர் முகத்தில் இழையோடிய மகிழ்ச்சி இப்போதும்.

- 4தமிழ்மீடியாவிற்காக : மாதுமை

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்