கோடம்பாக்கம் Corner

இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா வைரஸ் பற்றியதுதான். நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் தான் ஒருவருக்கொருவர் தரும் அன்பும் ,ஆதரவும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் ,நண்பர்களுக்கும் ,சமூகத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரதொடங்கியுள்ளோம்.

நம் பலருடைய வாழ்க்கையில் இந்த கொரோனா வைரஸ் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசயங்களை மையப்படுத்தி நகைச்சுவை ததும்ப , இயக்குநர் கோகுல் அவர்கள் புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.

அவர் தனது படத்துக்கு “கொரோனா குமார்” என்று பெயரிட்டுள்ளார். “ குமுதா ஹேப்பி அண்ணாச்சி” “மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள “ போன்ற காமெடி ட்ரெண்டிங் வசனங்கள் மூலம் இளைஞர்களை பரவசப்படுத்தி, வசன காமெடி மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கியவர் கோகுல். அடுத்ததாக அதே பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே பின்னணியாகக் கொண்டு கொரொனோவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாக உள்ளது. கோகுல் அவர்கள் இதற்க்கு முன்னதாக 'ரெளத்திரம்', 'காஷ்மோரா', 'ஜுங்கா' ஆகிய படங்களையும் இயக்கியவர் என்பது நினைவுக் கூறத்தக்கது. தற்போது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹெலன் ‘ தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். கோகுலின் அடுத்தப் படமாக 'கொரோனா குமார்' திரைப்படம் உருவாகவுள்ளது.

’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் உள்ள சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு விஷயம் செய்ய முடிவெடுக்கும் போது, லாக் டவுன் அறிவித்துவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரசியங்கள், காமெடியாக சொல்லவுள்ளோம். இந்தப் படம் நல்லதொரு சமூக கருத்துள்ளதாகவும் இருக்கும் என்கிறார் இயக்குனர். இந்தக் காலகட்டத்தில் நாம் எங்கு சென்றாலும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது , தனிமைப்படுதுதல் என்று இனம்புரியாத பயத்தை உணர்கிறோம். கொரோனா வைரஸ் என்பது ஒரு தொற்று தான். ஆனால், அந்த கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமியால் நமது மக்களுக்குள்ளேயே சில தவறான புரிந்துணர்வும் வரத் தொடங்கிவிட்டது. அந்த கிருமித் தொற்றுக்காக நம்முடைய மனிதத்தை எங்கும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இந்த மாதிரியான சம்பவங்களை எல்லாம் வைத்துத் தான் முழுக்க காமெடியாக, சமூகக் கருத்துடன் 'கொரோனா குமார்' உருவாகிறது.

இந்த திரைப்படம் ஹாலிவுட் அளவில் புகழ்பெற்ற SPINOFF ஜானரில் உருவாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த படமும் ஊரடங்கு மற்றும் தனிமை காலங்களில் நடைபெறுகிறது. விரைவில் படக்குழு பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படும். ஊரடங்கு விலக்கப்பட்டதும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படக்குழு. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் K.சதீஷ் தயாரிக்கவுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற விவரத்தை விரைவில் அறிவிக்கவுள்ளார்கள். மனநெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் அதை போக்கும் விதமான தரமான நகைச்சுவை படமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது .

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்