கோடம்பாக்கம் Corner

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் குண்டுவைத்து விட்டதாக ஒரு மர்ம நபர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சொன்னவரைத் தேடித் தேடி நேற்று ஓய்ந்துபோன காவல்துறையின் கடுப்பு நேற்று தொலைக்காட்சிகளில் செய்தியானது.

ரஜினி பற்றிய இன்னொரு சூடான செய்தியும் உண்டு. அது, தமிழக முதல்வர் எடப்பாடியுடன் ரஜினி தொலைபேசியில் உரையாடியதை ஊடகங்கள் செய்தியாக்காமல் விட்டுவிட்டன. அதற்குக் காரணம், அதை செய்தியாக்கினால் அரசு விளம்பரம் கிடையாது என அரசு பி.ஆர்.ஓ நேரடியாக ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கும் வாட்ஸ் ஆப்பில் சர்குலர் அனுப்பியது. ஆனால் அந்தச் செய்தியையும் இப்போது நாம் சொல்லிவிட்டோம்.

தற்போது கொரோனா பீதியாலும் ,ஊரடங்காலும் சென்னையில் மக்களில் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் நிலையில் ரஜினி என்ன செய்கிறார் என சில தகவல்கள் ரஜினியின் யோகா குரு வட்டாரத்திலிருந்து நமக்குக் கிடைத்தது. அதன்படி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து மார்னிங் 11 மணிக்கு வெளியே புறப்படும் ரஜினி, பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். அதன் பிறகு 4 மணி வரை உலக அளவில் புகழ் பெற்ற புத்தகங்களை வாசிக்கிறார். அதில் உள்ள முக்கிய விஷயங்களை அடிகோடிட்டு வைக்கிறார்.

மாலையில் பண்ணையை சுற்றி நடைப்பயிற்சி, அதன் பிறகு அரை மணி நேரம் தியானம், இதனையடுத்து மூச்சு பயிற்சி எடுத்துக் கொள்கிறார் ரஜினி. முக்கியமான சிலரிடம் ஃபோனில் அளவலாவும் ரஜினி, நடப்பு அரசியல் குறித்தும் விவாதிக்கிறாராம். அதனையடுத்து, குளிர்ந்த நீரில் குளித்து முடித்து விட்டு, இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்து விடுகிறார் ரஜினி. கடந்த இரு மாதங்களாகவே ரஜினி தனது பகல் நேரத்தை இப்படித்தான் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் ரஜியின் யோகா குரு வட்டாரத்தில்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.