கோடம்பாக்கம் Corner

திரையரங்குகளில் 3 ஆண்டுகள் ஓடிய திரைப்படங்களில் ஒன்று தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’.

இந்த இந்தப்படத்தை தொடர்ந்து அவரது பல படங்கள் மூன்று வருடங்கள் கடந்து ஓடிச் சாதனை படைத்து இருக்கின்றன. பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் ஓராண்டும் கூடுதலாக பத்துநாட்களுமாக 375 நாட்கள் ஓடும் படங்களுக்கு வெற்றிவிழாக்கள் கொண்டாடப்பட்டன அதன் பிறகு எண்பதுகளில் தொடங்கி 90கள் வரை என்பதில் தொடங்கி தொண்ணூறுகள் வரை 175 நாட்கள் ஓடும் படங்களுக்கு வெள்ளி விழாகள் கொண்டாடப்பட்டன. ரஜினி - கமல் உச்சத்தில் இருந்தபோது 175 நாட்கள் ஓடிய படங்களைக் காணமுடிந்தது.

ராதிகா ஆப்தேவின் இயக்கத்துக்கு முதல் விருது !

பின்னர் 90-களின் இறுதி தொடங்கி 2000 வரை 100 நாள் படங்கள் வெளிவந்தன. விஜய், அஜித், விக்ரம் நடித்த பல படங்கள் 100 நாட்கள் ஒடியிருக்கின்றன. 2000 பிறந்து புத்தாயிரத்தில் திரையுலகம் நுழைந்தபிறகு, ஒரு படம் டிஜிட்டல் முறையில் 300 முதல் 700 திரையரங்குகளில் ஒரே நேரத்தில்ரிலீஸ் ஆகி 15 நாட்கள் ஓடினால் வெற்றி ஐம்பது நாட்கள் 50% பார்வையாளர்களுடன் ஓடினாலே மிகப்வெற்றி என்ற நிலை உருவானது. அதற்கும் பின்வந்த பத்து ஆண்டுகளில் 2010 முதல் ஒரு படம் ஒரு வாரம் ஓடினாலே லாபகரமான படம் என்ற நிலை உருவானது. இப்படி நூறு நாட்கள் ஓடிய காலம் பெரும் கனவாக தமிழ் சினிமாவில் மாறிப்போனது. தற்போது இதையெல்லாம் இனிய நினைவுகள் போல எண்ணிப் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. ‘வெற்றிகரமான 100-வது நாள்’ என்று சுவரெட்டி ஓட்டப்பட்டது. தற்போது இதற்குக் இந்தச் செய்திக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது. கோரோனா ஊரடங்கல், தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டு வெற்றிகரமான 100 நாட்கள் இன்று நிறைவடைகின்றன.

நயன்தாராவுக்கு முதல் முறையாக முத்தம்!

குறிப்பாக இன்று தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட 100-வது நாள் என்பதை நினைவில் வைத்து வருத்தமுடன் நெட்டிசன்கள் ‘வெற்றிகரமான நூறாவது நாள்’ என்று வருத்தக் குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலக வரலாற்றில் இது ஒரு பரிதாபகரமான பதிவுதான். திரையரங்குகள் மூடப்பட்டு தமிழகத்தில் இன்றுடன் 100வது நாள்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

இதையும் ஒருமுறை பார்த்துச்செல்லுங்கள் :

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து