கோடம்பாக்கம் Corner

‘தல’ என்று அஜித் என்று தங்களின் தலைவரைப்போல அஜித்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், அவரது சின்ன நகர்வைக் கூட #டேக் மூலம் இந்திய அளவில் ட்ரெண்டாக்கிவிடுவார்கள்.

தற்போது #AjithLedDroneToFightCorona என்ற #டேக்கீனை பிரபலப்படுத்தி வருகிறார்கள். அதற்குக் காரணம் தமிழக அரசுக்கு அஜித் கொடுத்த யோசனை அபாரமாக வெற்றி பெற்றிருப்பதுதான்.

எஸ்.எஸ். ராஜமௌலிக்கு வந்த சத்திய சோதனை!

தொழில்முறைப் போட்டியாக கார் மற்றும் பைக் ரேஸ் விடுவதை அஜித் நிறுத்திக்கொண்ட பிறகு புகைப்படக் கலையிலும் ட்ரோன் விமானங்களை இயக்கி மகிழ்வதிலும் தனது ஓய்வு நேரங்களைச் செலவிட்டு வருகிறார். சென்னையில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான ‘தக்ஷா’ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் ஆலோசகர்களில் ஒருவராக அஜித் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அருண் விஜய் படத்தில் வில்லனாகும் தயாரிப்பாளர்!

இந்த தக்‌ஷா மையத்தில் ஆளில்லா விமானங்களை உள்நாட்டிலேயே செய்து இயக்கும் பணக்கார மாணவர்களைக் கொண்ட அணி செயல்பட்டு வருகிறது. அந்த அணிக்கு நிதியுதவி செய்வதுடன் அதற்கும் ஆலோசகராகவும் அஜித் இருந்து வருகிறார். இந்த தக்‌ஷா அணியினைப் பயன்படுத்தி சென்னையில் கொரோனா அதிக அளவில் பாதித்த கோடம்பாக்கம் உட்பட சிவப்பு மண்டல வார்டுகளில் திரவ கிருமி நாசினி தெளிக்கலாம் என்ற யோசனையை அஜித் முன்வைக்க அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, இந்த தக்‌ஷா அணியின் உதவியுடன் சிவப்பு மண்டல வார்டுகளில் ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தப் பணியில் அஜித்துடனும் தக்‌ஷா அணியுடனும் டாக்டர் கார்த்திக் நாராயண் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் இந்தத் தகவலை, தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அந்தக் காணொளியையே தற்போது அஜித் ரசிகர்கள் #AjithLedDroneToFightCorona என்ற #டேக்காக பிரபலப் படுத்தி வருகின்றனர்.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து