கோடம்பாக்கம் Corner

ஆந்திரமாநிலம், ஹைதராபாத்தில் தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் வசித்து வருகிறார்.

மூத்த பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி. கடந்த 2010 ஆம் ஆண்டுவரை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீனஸ் காலணியில் உள்ள அவரது சொந்த வீட்டில் வசித்து வந்த அவர், மகனின் வேண்டுகோளை ஏற்று ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தவறான செய்திகள் வந்துகொண்டே இருந்தன. தற்போதைய கோரோனா காலத்திலும் அவர் உடல்நலம் குன்றிவிட்டதாகவும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் நம்பகமற்ற தகவல்கள் பரவின.

ராதிகா ஆப்தேவின் இயக்கத்துக்கு முதல் விருது !

இந்நிலையில் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான இசையமைப்பாளர் திணா, ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இதுபற்றி நான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் பேசினேன். உடனே அவர் எஸ்.ஜானகி அம்மாவை தொடர்புகொண்டு பேசினார். நல்லமுறையில் சந்தோஷமாக ஆரோக்கியத்துடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். எந்த பயமும் இல்லை. அவர் தரப்பில் ஒரு காமெடியான விஷயத்தையும் சொன்னார். இதுவரை என்னை 6 முறை கொன்று விட்டார்கள்.” என்று கூறியதாக தெரிவித்துள்ளார். எஸ்.ஜானகியின் மகன் முரளியுடமும் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். ‘அம்மாவுக்கு சிறிய அறுவை சிகிச்சை ஒன்று நடந்திருக்கிறது. தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நலமாக உள்ளார். எனவே தவறான செய்திப் பரப்பவேண்டாம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

விக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 17 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் 5 மொழிகளில் பின்னணி பாடியுள்ள இவர் 5 தலைமுறை கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்