இந்திய அளவில் ஹேஷ் டேக்குகளை பிரபலப்படுத்துவதில் விஜய் - அஜித் ஆகிய இருவருடைய ரசிகர்களுமே சளைத்தவர்கள் கிடையாது.
அப்படியானல் அவர்களை சமூக ஊடகங்களில் பின்தொடரும் ‘ஃபாலோயர்கள்’ எண்ணிக்கையும் அதிமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அதுதான் இல்லை. யார் எந்த சமூக வலைதளங்களில் வலுவாக இருக்கிறார்கள். அவர்களது பலம் என் என்பதைப் பார்க்கலாம்.
பொதுவாக சினிமா பிரபலங்கள் பலரும் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துக்கொண்டு அதில் தங்களுடைய போட்டோ, வீடியோ, மற்றும் தங்கள் படங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டு அதில் தங்களை பிரபலப்படுத்தி கொள்கிறார்கள். மலையாள சினிமாவின் விஐபிகள் முகநூலை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் சினிமா விஐபிக்கள் ட்விட்டரை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்துவது நடிகைகள்தான். தென்னிந்திய நடிகர்களில் ட்விட்டரில் அதிக பின்தொடரும் ஃபாலோயர்களை கொண்டிருப்பதில் பவர் ஸ்டார் என்று புகழப்படும் மகேஷ் பாபு முதலிடத்தில் இருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தை ஒரு கோடி பேர் பின் தொடர்கின்றனர்.
விக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்!
அடுத்த இடத்தில் இருப்பவர் தமிழ்நாட்டின் தனுஷ். அவரது ட்விட்டர் பக்கத்தை 96 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ட்விட்டரில் கமலை 61 லட்சம் பேரும் ரஜினியை 57 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். அப்படியானல் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும். நம்பினால் நம்புங்கள், அவரைத் ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் வெறும் 5 லட்சம் பேர் தான். அஜித் அவர் எந்த சமூக வலைத்தளத்திலும் தனக்கு கணக்கை உருவாக்கிக்கொள்ளவில்லை. இந்திய அளவிலான நட்சத்திரங்களில் டுவிட்டரில் டாப் 10 பட்டியலில் முன்னிலை வகிப்பவர் பாலிவுட்டின் பழுத்த பழம் பிக் பி அமிதாப் பச்சன். அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் 4.30 கோடி பேர். அவரை பிக் பீ என்று சொல்வது எவ்வளவு சரி!
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்