கோடம்பாக்கம் Corner

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தை தயாரித்திருந்த கலைச்செல்வன் ‘போலீஸ்’ எனறு லேபிள் ஒட்டிய காரில் மது கடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பெருநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தாதா 87 படத்தில் லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தினார். தற்போது தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கும் சாருஹாசன் ‘தாதா 87’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

விக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்!

இதுபற்றி படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது “ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் டீசர் வெளியான நேரத்தில் தாதா 87 பட டீசரும் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றதோடு உலகளவிலும் ட்ரெண்டானது. இப்படத்தினை பார்த்த பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என கேட்டுக்கொண்டதாகவும் அதனை மனதில் வைத்து பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும்‌ என்ற கருத்தை முன்வைத்து சாருஹாசனை மீண்டும் இயக்குவதாக” இயக்குநர் விஜய் ஸ்ரீஜி நம்மிடம் தெரிவித்தார். 

சமூக ஊடகத்தில் விஜய் - அஜித்தின் பலம் என்ன?

மேலும் பேசிய அவர் “இந்தப் படம் பற்றிக் குறிப்பிட்ட அவர் “உள்ளூரில் சாமான்யனாக தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் இப்படம் உருவாகிறது. தற்போது 90 வயதிலும் உலக அளவில் நடிக்கிற நடிகர் என்ற பெருமை பெற்ற சாருஹாசன் நடிப்பில் உலகநாயகன் என்ற பெயர் பெற்ற கமல்ஹாசன் போல் வயதில் உலக நாயகன் என இடம்பெறுகிறார்.

முன்னணி நடிகர், நடிகையினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகர், நடிகையினர் அனைவரும் ரசிக்கும் வண்ணம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்” என்றார். தாதா 87- 2.0 என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றுள்ளதாம்.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

வெங்கட் பிரபுவும் சிம்புவும் சினிமா பார்ட்டிகளில் பழகி நண்பர்கள் ஆனவர்கள். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்ய இருந்தனர்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது