கோடம்பாக்கம் Corner

சினிமாவில் நடிக்க சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்யவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பல மோசமான ஆட்கள்,

ஆடிஷன் என்ற பெயரில் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன. இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்கா, இளம் நடிகை அண்ணா பென்னுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆடிஷன் என்று சொல்லி, தனியாக அழைத்து யாராவது தவறாக நடந்து கொள்ள முயற்சித்தால், உடனே 984 634 2226 மற்றும் 964 534 2226 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.