கோடம்பாக்கம் Corner

‘துப்பறிவாளன் -2’ படத்திற்காக மீண்டும் இணைந்து பணியாற்ற இயக்குநர் மிஷ்கினும் நடிகர் விஷாலும் இரண்டு கட்ட சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருப்பதாக நம்பகமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘துப்பறிவாளன்’ படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார் மிஷ்கின். ஆனால், செலவுகளை மிஷகின் இஷ்டத்துக்கு ஏற்றுவிட்டதாகவும் பேசிய சம்பளத்தைவிட 65% அதிகமாகக் கேட்பதாகவும் மிஷ்கின் மீது புகார்கூறினார் அப்படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான விஷால், படத்திலிருந்து இயக்குனரை வெளியேற்றினார். அவர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அப்போது அனுப்பியிருந்த அறிக்கையில் லன்டனில் நடந்து வந்த படப்பிடிப்பின் முடிவில், தனக்கும் இயக்குநருக்கும் பொருளாதார ரீதியாக சிக்கல் ஏற்பட்டதாகக் கூறினார். அதற்கு பதிலடியாக இயக்குனர் மிஷ்கின் 13 நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு 5 கோடி சம்பளம் மற்றும் தெலுங்கு இந்தி ரீமேக் உரிமைகள் ஆகியவற்றைக் கொடுத்துவிட வேண்டும் என்று கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சண்டை நடந்த சில நாட்களில் ஒரு வெப்சீரீஸ் திரைப்பட விழா நிகழ்வில் பேசிய மிக்‌ஷின் ‘விஷால் தன்னை படத்திலிருந்து நீக்கியதற்காக’ அவரை ஒருமையில் கடுமையாக விமர்சித்தார் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் விஷாலை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார். லாக் டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், மிஷ்கின் மற்றும் விஷால் இருவருமே பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து மிஷ்கின் விஷால் இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும் ‘துப்பறிவாளன் 2’ படத்தை தொடர்வதில் இருக்கும் சிக்கல்களைக் களைய இருவரும் சமீபத்தில் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விஷால் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு கட்டப் பேச்சு வார்த்தைகள் சமரசத்தில் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுவதால், லாக் டவுனுக்குப் பிறகு துப்பறிவாளன் 2 படத்தை தொடங்கும்முன் முறையான ஒப்பந்தங்களுடன் தொடங்கலாம் என்று பேசி முடித்திருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து இருவரும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ஊடகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்