கோடம்பாக்கம் Corner

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படத்துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்து வரும் நிலையில் மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை 50 சதவிகிதம் குறைத்துக்கொள்ள முன்வந்திருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

வித்தியாசமான கதைக்களம் அழகான காட்சியமைப்பு என ஒட்டுமொத்த இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தி வரும் மலையாள திரையுலகம் ஆன்லைன் பைரசி தடுப்பு போன்ற பல விஷயங்களில் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. அந்த வகையில் கொரோனா பேரிடரில் இருந்து திரைத்துறையை மீட்கவும் பல நடவடிக்கைகளை மலையாள திரையுலகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை 50 சதவிகிதம் குறைத்துகொள்ள முன்வந்துள்ளனர்.

ரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா!

இதுதொடர்பாக அண்மையில் கொச்சியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு அதன் முடிவில் ஊதியம் குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மலையாள திரையுலகை பொறுத்தவரை அதன் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் அதிகபட்சமாக ஒரு படத்துக்கு 5 முதல் 8 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அதேபோல் மற்றொரு முன்னணி நாயகனான மம்முட்டி ஒரு படத்துக்கு 4 முதல் 5 கோடியும் பிருத்விராஜ் 2 முதல் 3 கோடியும் சம்பளமாக பெறுகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக நிவின் பாலி, துல்கர் சல்மான் ஆகியோர் 2 கோடி ஃபஹத் ஃபாசில் 60 லட்சம் என மலையாள உலகின் முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்துக்கு தங்களுடைய சம்பளமாக நிர்ணயித்து வருகின்றனர்.

நடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது!

இந்த நிலையில் இவர்கள் 50 சதவிகிதம் வரை சம்பளம் குறைத்துகொள்ள ஒப்புக்கொண்டிருப்பது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்திருப்பதுடன் சோர்ந்திருக்கும் திரையுலகை மீண்டும் புத்துயிர் பெற செய்யும் எனவும் கூறப்படுகின்றன.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.