கோடம்பாக்கம் Corner

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.

அதனால் இப்போதும் மங்காத்தா படம் என்றால் அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதலே, பிரபலங்கள் வீட்டிலிருந்தபடியே சமூக வலைதளங்கள் வழியே நேரலையில் பேட்டியளித்து வருகின்றனர். அப்படி இயக்குநர் வெங்கட் பிரபு, மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் நேரலையில் கலந்துரையாடினார். அவர் கேட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்தார்.

மலையாள மாஸ் ஹீரோக்களின் சம்பள புரட்சி!

தளபதி விஜய் பற்றிய கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “சிவகாசி படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். முன்பிலிருந்தே அவருடன் பழக்கம் இருந்தது. ‘மங்காத்தா’ படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது. அப்போது நிறைய பேசினோம். ‘கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்’ என்று சொன்னார். சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான ஒரு படம் செய்வேன் ” என்று வெங்கட் பிரபு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.