கோடம்பாக்கம் Corner

ஜூலை 10 வெள்ளிக்கிழமை இன்றிலிருந்து தமிழ்நாட்டின் முதல் ஓடிடியான ‘ரீகல் டாக்கீஸ்’ செயல்படத் தொடங்குகிறது. அதுகுறித்து அதனை உருவாக்கியிருக்கும் பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் கேட்டோம்.

அப்போது அவர், “என்னோட சின்ன வயசுல மும்பையில் உள்ள(டெல்லியிலும் இதே பெயரில் இருந்த திரையரங்கு தற்போது இடிக்கப்பட்டுவிட்டது) இதே ரீகல் சினிமாஸ் திரையரங்கில் படம் பார்த்திருக்கேன். அப்பவே ஏசி, கார் பார்க்கிங் வசதிகளோட அழகா இருக்கும். பெரியவனா ஆனதுக்குப் பிறகு நம்மூர்ல தியேட்டர் கட்டுனா இப்படியிருக்கணும்னு கற்பனை பண்ணி பார்த்திருக்கேன். இந்தப் பேரும் எனக்குள்ள பதிய ஆரம்பிச்சிருச்சு. அதனால, என்னோட டிஜிட்டல் தளத்துக்கு ரீகல் டாக்கீஸ்னு பேர் வெச்சேன். நானும், என் நண்பர் சுதாகரும் ஒண்ணா சேர்ந்து இதை ஆரம்பிச்சிருக்கோம்.

டெக்னிக்கல் விஷங்களை சுதாகரும் கன்டென்ட்டை நானும் பார்த்துக்கிட்டு இருக்கோம். நிறைய ஓடிடி பிளாட்ஃபார்ம் இருந்தும் தனியா தொடங்கக் காரணம், நாங்க யாரையும் போட்டியாளரா பார்க்கல. ஏன்னா, எங்க மீடியம்ல ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படத்துக்கும் பணம் கட்டி படம் பார்க்கணும். மாசம், மாசம் சப்ஸ்கிரைப் பண்ணத் தேவையில்ல. அதனால, மற்ற ஓடிடி பிளாட்ஃபார்மைக் காட்டிலும் எங்களோடது முற்றிலும் வேற. திருமுருகன் என்டர்டெயின்மென்ட் என்ற எனது தயாரிப்பு நிறுவனத்தில் வித்தியாசமான படங்களைத் தயாரிச்சது மாதிரியே, இதுலயும் வித்தியாசமான படங்களை வெளியிட தொடங்கியிருக்கோம். சற்று பெரிய குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கு இதில் தனியிடம் உண்டு.

பெரிய கமர்ஷியல் படங்களை வாங்கி வெளியிடுற ஐடியா இல்ல. ஏன்னா, கன்டென்ட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரயிருக்கோம். பைரசி பிரச்னை அதிகமா இருக்குறப்போ ஒவ்வொரு படத்துக்கும் பணம் கொடுத்து மக்கள் பார்ப்பாங்களான்னு சந்தேகம் இருக்கு. கொஞ்சம் லாபம் கிடைச்சாலும் போதும்னு நினைக்கிறோம்” என்கிறார் சி.வி.குமார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

வெங்கட் பிரபுவும் சிம்புவும் சினிமா பார்ட்டிகளில் பழகி நண்பர்கள் ஆனவர்கள். இருவரும் கடந்த 2015-ம் ஆண்டிலேயே இணைந்து படம் செய்ய இருந்தனர்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது