கோடம்பாக்கம் Corner

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதாக சபதம் எடுத்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.

இயக்குநர் சிகரம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு,90 மரக் கன்றுகளை நடுவதற்கு, இயக்குநர் சிகரம் அவர்களின் புதல்வி திருமதி.புஷ்பா கந்தசாமி அவர்களும், மருமகன் திரு.கந்தசாமி அவர்களும், முதல் இரு மரக்கன்றுகளையும், நன்கொடையாக பத்தாயிரம்(10,000/-)ரூபாயும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களிடம் கொடுத்தார்கள்.

திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸானது அஜித்தின் விஸ்வாசம்!

இதை தொடர்ந்து கலைமாமணி நடிகை குமாரி சச்சு, நடிகை திருமதி.ரேணுகாகுமரன், நடிகர்கள் திரு.ராஜேஷ், திரு.பூவிலங்குமோகன், திரு.ரகுமான், திரு.ராம்ஜி, திரு.குமரன், நடிகரும் கராத்தே மாஸ்டருமான திரு.சிஹான் உசேன் HU, இயக்குநர் நடிகர் தயாரிப்பாளருமான திரு.T.P.கஜேந்திரன், நடிகரும் இயக்குநருமான திரு.ரமேஷ்கண்ணா, கவிஞர் இயக்குநர் திரு.கண்மணி சுப்பு, இயக்குநர் திரு.நாகா, தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் திரு.தளபதி,
பொதுச் செயலாளர் திரு.C.ரெங்கநாதன், இணைச் செயலாளர் திரு.T.R.விஐயன், கே.பி.அவர்களின் வண்டி ஓட்டுனர், திரு.கோவிந்தசாமி, திரு.ராஜேந்திரன் ஆகியோர்,முதல் பகுதியாக கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் மரக்கன்றுகளை வழங்கினார்கள். தொடர்ந்து, கே.பி.90-மரம் நடும் சபதம் என்கிற தலைப்பில் இந்த வருடம் முழுவதும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.