கோடம்பாக்கம் Corner

பெரிய திரை, சின்னத்திரை இரண்டிலுமே வெற்றிகரமான நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி.

உடல் பருமனை நகைச்சுவைக்கான ஒன்றாக பயன்படுத்திவரும் தவறான தமிழ் சினிமா போக்கிற்கு முதலில் ஆர்த்தியும் அடிபணிய வேண்டி வந்தது. அதன்பின் நல்ல நகைச்சுவை நோக்கி நகர்ந்தவர். கடந்த 2009-ஆம் வருடம் சக நகைச்சுவை நடிகரான கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் கணேஷ் இருவரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். நல்ல மனமொத்த தம்பதிகளாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 4: கமலுக்கு சீரழிவா; விளம்பரமா ?

இந்நிலையில் ஆர்த்தி தற்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் ‘ஸ்கீரின் ஷாட்’ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தான் இரண்டு வயது சிறுமியாக இருக்கும் போது கணேஷை சந்தித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மலையாளப் படத்தில் கணேஷ் - ஆர்த்தி இருவரும் அண்ணணும் தங்கையுமாக குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருக்கிறார். அவர்களுடன் நடிகை ஸ்ரீவித்யா இருக்கிறார். ஆர்த்தி தனது பதிவில் ‘இது பேபி ஆர்த்தி மற்றும் மாஸ்டர் கணேஷ் இணைந்து நடித்த முதல் படம். கடவுள் தான் எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே என் கணவரை சந்திக்க வைத்துள்ளார். கிரேட் ஸ்ரீவித்யா அம்மா உடனான நினைவுகள்’ என ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

கலைவாணர் கொடுத்த உதாரணம்!

ஆர்த்தி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்றுள்ளார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் அவர்களுடன் பங்கேற்று இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதன் பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தாலும் அவர் 21 நாட்கள் மட்டுமே நிகழ்ச்சியில் நீடித்தார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

கோலிவுட் டோலிவுட் மல்லூவுட் சாண்டல்வுட் என தென்னிந்திய திரையுலகில் முக்கிய நாயகியாக வலம்வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.