கோடம்பாக்கம் Corner

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான என்.டி.மோலும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தொலைக்காட்சி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

போட்டியாளர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட நிலையில் கமலஹாசனும் ஒப்புக்கொண்டு வேலைகள், ஸ்கிரிப்ட் ஒர்க் அனைத்தும் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த முடிவை பரிசீலித்து வருவதாக விஜய் டிவி செய்தித் தொடர்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்னதான் உண்மையான காரணம் என்று துருவியபோது ‘எல்லாம் கொரோனா உயிர்பயம் தான் சார்.. கோரானாவல் பரிதாபகரமாக முடங்கிப்போன பலவற்றில் பிக்பாஸ் சிசன் 4 இப்போது சேர்ந்துவிட்டது’ என்கிறார்கள். பிக்பாஸ் 4-இல் கலந்து கொள்ள தேர்ந்தெடுத்தப் போட்டியாளர்கள் இடையே இந்த முறை ஆர்வமும் துளியும் இல்லை என்பதுதான் காரணமாம். பெரும்பாலான போட்டியாளர்கள் ‘கடந்த நான்கு மாசங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டுமொரு பூட்டிய வீட்டிற்குள் 100 நாட்களுக்கு எங்களால் இருக்கமுடியாது’ என்று பதில் கூறவே தயாரிப்பு மற்றும் ஒளிப்பரப்பு நிறுவங்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.

ஒவ்வொரு புதிய படமும் ஒரு புதிய அனுபவம். சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவுக்கு எதிரான பொலிஸ் வன்முறையைப் பற்றி விரியும் இந்த திரைப்படம் வெளியானது முதல் நல் வரவேற்பை பெற்றுவருகிறது.