கோடம்பாக்கம் Corner

கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.

கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளலை. தற்போதிருக்கும் ஊரடங்கு பிரச்சினை காரண்மாக, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது சீரியல் குழு. இந்தப் பிரச்சினைகளால் பல்வேறு முன்னணி சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் 'சித்தி 2' சீரியலில் நிகழ்ந்துள்ள மாற்றம் தொடர்பாக ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பது இதுதான்: "சிக்கல்களுக்கு நடுவிலும் ’சித்தி 2’ படப்பிடிப்பு தொடர்கிறது. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். பாதுகாப்பே முக்கியம் என்பதால் நடிகர்கள் மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. விரைவில் 'சித்தி 2' உங்கள் சன் டிவியில் காணலாம் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.இந்த ட்வீட்டுடன் ராதிகா சரத்குமார் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் பொன்வண்ணன் உள்ளிட்ட சில முக்கிய நடிகர்கள் இடம்பெறவில்லை. இதனால் யார் எல்லாம் மாற்றப்பட்டுள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும். நடிகர்களை இப்படி அதிரடியாக ராதிகா மாற்றியது குறித்து சின்னத் திரை வட்டாரம் அதிர்ந்துபோய் கிடக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.