கோடம்பாக்கம் Corner

தேவர் மகன் படத்துக்குப் பிறகு கௌதமியும் கமல்ஹாசனும் 25 ஆண்டுகளாக இல்லறத்தில் இணைந்திருந்தனர்.

ஆனால், கமல் மகள்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மகளுடன் கமலை விட்டுப் பிரிந்தார் கௌதமி எனக் கூறப்பட்டது. அதன்பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததார். இதனால் அவருக்கு தணிக்கைக்குழு முதன்மை உறுப்பினர் பதவியை அக்கட்சியின் ஆட்சி வழங்கியது.

மதன் கார்க்கியின் ‘பயில்’ பாடத் திட்டம்

இந்நிலையில் கமலின் விஸ்வரூபம் படத்தில் அதன் இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தவர் அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான பூஜா குமார். தயாரிப்பாளர் இயக்குனர் கே ஆர் இயக்கிய ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இந்த பூஜா குமார். அமெரிக்காவில் செட்டிலான இவரை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் கமலஹாசன். விஸ்வரூபம் படங்களுக்குப் பிறகு கமலின் குடும்ப நிகழ்ச்சிகள், திரையுலக நிகழ்ச்சிகளில் அவருடன் சேர்ந்து கலந்து கொண்டார்.

மணிரத்னத்துக்காக இலவசமாக நடிக்கும் ஹீரோக்கள்!

இதனால் கௌதமிக்கு பிறகு தனது வாழ்க்கை துணையாக பூஜா குமாரை கமல் ஏற்றுக் கொண்டிருக்கலாம் என தகவல்கள் பரவின. ஆனால் இதை கமல் தரப்பு மறுத்தது. இந்நிலையில் பூஜா குமார் மற்ற படங்களில் நடிக்க போட்டோ ஷூட் எடுத்து தனது படங்களை ஊடகங்களுக்கு கொடுத்து வந்தார். ஆனால் அவருக்கு புதிய வாய்ப்புகள் அமையவில்லை. மாறாக இதுபோன்ற வதந்திகள் வெளியாகின. அவற்றை தவிர்க்கும் பொருட்டு பூஜா குமார் தற்போது கொரோனா ஊரடங்கு தொடங்கும் முன்னரே அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். கமலுக்கும் தனக்குமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என கமல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்