கோடம்பாக்கம் Corner

பாகுபலி படத்துக்கு முன் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி, இந்தியா முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்த படம் ‘நான் ஈ’.

அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லன் வேடமும் பேசப்பட்டது. அதில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கன்னட நடிகர் சுதீப்.

அந்தப் படத்துக்குப் பின் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகர் சுதீப் கன்னட சினிமாவில் முன்னனிக் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது தனது அறக்கட்டளை மூலம் கர்நாடகாவில் நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். கொரோனா மூலம் ஏற்பட்டுள்ள பொருளாதார நஷ்டம் காரணமாக பல நடிகர், நடிகைகள், தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

தற்போது, நடிகர் சுதீப், கர்நாடகா சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒப்பவஹள்ளி அரசு பள்ளி, சல்லாகேரே பள்ளி, பரசுராமபுர பள்ளி, சித்ரதுர்கா அரசு பள்ளி ஆகிய 4 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளார். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், தரமான கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என சுதீப் டிரஸ்ட் சார்பாக தெரிவித்துள்ளது. மேலும், இதன்மூலம், அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த பல திட்டங்களையும் வைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.