கோடம்பாக்கம் Corner

மணிரத்னத்தின் உதவியளரும் இயக்குநனமான் ஆர்.கண்ணன் இயக்கும் எல்லா படங்களிலும் கம்பெனி ஆர்டிஸ்ட் போல நடித்துக்கொடுத்துவிடுவார் சந்தானம்.

அதற்குக்காரணம், சந்தானத்துக்கு கதையில் முக்கியத்துவம் கொடுத்து அவரை வளர்த்துவிட்டவர் ஆர்.கண்ணன். தற்போது சந்தானம் நடிப்பில் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் 'பிஸ்கோத்' என்ற படத்தில் நடித்துக்கொடுத்துள்ளார் சந்தானம். நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காதும் காதும் வைத்தமாதிரி கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.

சூர்யாவுக்கு பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு!

‘பிஸ்கோத்’ படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்தில் 30 நிமிடம் இடம்பெறும் கனவுக் காட்சிகளில் ராசியில்லாத ‘ராஜ’ வாரிசு வேடத்தில் சந்தானம் நடித்திருக்கிறாராம்.

‘பாகுபலி’ பிரபாஸ் சம்பளம் இல்லாமல் நடிக்கிறார்!

இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறியிருப்பதாவது: “படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது. அதனால்தான் படத்துக்கு 'பிஸ்கோத்' என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம். வடிவேலுவுக்கு எப்படி 'இம்சை அரசன்' அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு 'பிஸ்கோத்' படம் அமையும்.” என்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.