கோடம்பாக்கம் Corner

கொடைக்கானலின் புகழ்பெற்ற பேரிஜ‌ம் நன்னீர் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என திண்டுகல் மாவ‌ட்ட‌ வ‌ன அலுவ‌ல‌ர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் எப்போது நடந்தது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

பேரிஜம் ஏரி (Berijam Lake) என்பது கொடைக்கானலின், மோயர்முனைப் பகுதியிலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 24 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பேரிஜம் ஏரியின் தண்ணீர், தேனி மாவட்டம், பெரியகுளம் மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது. பேரிஜம் ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2ஆவது இடத்தை பெற்றுள்ளது. பேரிஜம் செல்லும் வழியில் உள்ள மதிக்கெட்டான் சோலையில், வனத்துறையின் அனுமதியுடன் மலையேறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பகுதி அதிகமான மூலிகைச் செடிகளும், சிறுத்தை, செந்நாய், காட்டு மாடு, மலைப் பன்றி, மான், காட்டுக் கோழி போன்ற காட்டு உயிரினங்களும் கொண்டது இந்த ஏரி. இந்த ஏரியில் உரிமம் பெற்ற கொடைகாணல் வாசிகள் மட்டுமே படகுச் சவாரி செய்யலாம். மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.