கோடம்பாக்கம் Corner

சிவார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜா காமாரஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கனா.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றதுடன் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கனா படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன குறிப்பாக ‘வாயாடி பெத்தப் புள்ள...’, ‘ஒத்தையடி பாதையில..’ஆகிய பாடல்களும் ஹிட் அடித்தன. இந்த இரண்டு பாடல்களும் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளன.

வெப் சீரீஸ் ஆகிறது வீரப்பன் வாழ்க்கை!

குறிப்பாக தனது மகள் ஆராதனாவுடன் இணைந்து சிவாகார்த்திகேயன் பாடியிருந்த ‘வாயாடி பெத்தப் புள்ள’ பாடல் 175 மில்லியன் பார்வையாளர்களையும், ஒத்தையடி பாதையில பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்திருக்கின்றன. இந்த மகிழ்சியை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தச் சாதனைக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது