கோடம்பாக்கம் Corner

பேய் படங்கள் உட்பட தமன்னா நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நடித்துவிட்டார் தமன்னா.

தமிழ்நாட்டில் முதன் முதலில் ஆர்.எம்.கே.வி. பட்டுப்புடவை விளம்பரத்தில் மாடலாகத் தோன்றி பின் தமிழ் சினிமாவில் நடித்த இந்த சிந்திப் பெண், தமிழில் பல படங்களில் கவர்ந்தாலும் பாகுபலி படத்தில் அவந்திகாவாக நடித்தாலும் ‘தர்மதுரை’ படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.

மகளுடன் இணைந்து சிவகார்த்திகேயன் சாதனை!

அத்தகைய தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகையான தமன்னா, கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்தேறி மும்பையில் உள்ள தனது கேட்டெட் கம்யூனிட்டி வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் யோகா செய்யும் காட்சிகளை புகைப்படங்களாக வெளியிட்டு வந்தவர் தற்போது வனப்பகுதியைத் தேடிச் சென்றிருக்கிறார். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அசங்கான் மசூலி வனப்பகுதிக்கு வனத்துறையின் அனுமதியுடன் விவிஐபிகள் ட்ரெக்கிங் செல்லும் பகுதிக்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார்.

நன்றி கூறும் யோகிபாபு!

வனத்தில் ட்ரெக்கிங் செய்யும் முன்பாக ஒரு கிராமத்தில் தண்ணீர் கேன் வாங்க நின்றபோது ஒரு தெருவில் பல குட்டிகளுக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு தாய் நாயையும் அதன் குட்டிகளையும் கண்டு, அவற்றைக் சிறிதுநேரம் கொஞ்சிவிட்டு ட்ரெக்கிங் கிளம்பிய தம்மன்னா... ‘நாய் குட்டிகள் மீதான அன்பைப்போல சிறந்தது ஏதுமில்லை’ என்று பதிவிட்டிருக்கும் அவர், காட்டில் நடந்து செல்லும் புகைப்படத்துக்கு கீழே, “இயற்கையில் தொலைந்துபோய்விடுங்கள்; அப்போது உங்களை நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளலாம்” என்று தத்துவம் உதிர்த்திருக்கிறார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது