கோடம்பாக்கம் Corner

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இதுவரை யாரைக்குறித்தும் குறை கூறியதில்லை.

அப்படிப்பட்டவரையே பாலிவுட்டில் சில இசையமைப்பாளர்கள் கூட்டணி சேர்ந்துகொண்டு தற்போது கதறவிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் ரஹ்மான் அளித்த பேட்டி ஒன்றில் “நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல், தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க அந்த கும்பல் வேலை செய்கிறது. இந்தி படங்களில் என்னை இசையமைப்பாளராக போடவேண்டாமென்று அவர்கள் தடுக்கிறார்கள்.

தனுஷுக்கு முன்னுரிமை கொடுக்கும் வெற்றிமாறன்!

பரவாயில்லை எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என நம்புபவன் நான்.எனக்கு வரும் படங்களுக்கு நான் இசை அமைக்கிறேன் அனைவரையுமே நான் வரவேற்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ஆனால், தனக்கு வரும் வாய்ப்புகளை தடுப்பவர்கள் யார் என்பதை அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை. அந்தத் தகவல்களை விரைவில் ஊடக உலகமே துருவி வெளிக்கொண்டுவந்துவிடும்.

விஜய் ஆண்டனியால் மறக்கமுடியாத ‘2.0 பிச்சைக்காரன்’

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.