கோடம்பாக்கம் Corner

வழக்கமாக பொதுவில் வெடித்துக் கிளம்பும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முந்திரிக்கொட்டைபோல் முன்னாள் வந்து மூக்கை நுழைத்து கருத்துச் சொல்லுபவர் ஆர்.ஜே.பாலாஜி.

தற்போது கந்தர் சஷ்டி கவசம் காணொளி விவகாரத்தில் அவர் சுத்தமாக வாய் திறக்கவில்லை. இந்துமத உணர்வாளர்களின் மனதை காயப்படுத்திய அந்தக் காணொளிக்கு எதிராக தமிழகத்தில் திராவிட இயக்கங்களே வாய் திறக்கவில்லை. மாறாக தங்கள் ஓட்டு அரசியலை மனதில் வைத்து அனைவரும் ஓரணியில் திரண்டு வீடியோ போட்டவர்களை கைது செய்தும் அவர்களது சேனலை முடியும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்துவிட்டார்கள்.

இதனால் தமிழ் சினிமாவில் இனி சர்ச்சைக்குரிய மதக் கருத்துக்களை பேசவும் எள்ளல் செய்யவும் சினிமாகாரர்கள் பயப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நயன்தாராவை வைத்து தான் எடுத்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் தொடை நடுங்கி கொண்டிருக்கிறாராம் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தின் இயக்குனரும் ஹீரோவான ஆர் ஜே பாலாஜிமறைமுகமாக அந்தப் படத்தை தயாரித்தும் இருப்பதால்தான் இவ்வளவு நடுக்கம் என்கிறார்கள். அதனால் காதும் காதும் வைத்தமாதிரி ‘மூக்குத்தி அம்மனை’ அமேசான் நிறுவத்துக்கு விற்க பேச்சு வார்த்தையில் இறங்கிவிட்டாராம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது