கோடம்பாக்கம் Corner

பாலிவுட்டில் தன்னை இசையமைக்கவிடாமல் செய்ய கும்பலாகச் சேர்ந்து செயல்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் இரு தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக கவிப்பேரரசு வைரமுத்து ஆதரவுக்குக் கரம் நீட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குப் பிறகு நெப்போடிசம் குறித்த பேச்சு பாலிவுட்டில் தொடர்ந்து வருகிறது. ஆரம்பம் முதலே சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பல ட்வீட்களை செய்து வந்தார். சுஷாந்த்தின் கடைசி படமான ‘தில் பெச்சாராவுக்கு’ ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார்.

பாலிவுட்டில் கும்பல் சதி! யாரைக் குறிப்பிடுகிறார் ஏ ஆர் ரகுமான்?

கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில்கலந்துகொள்ள சென்ற போது பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான்,பாலிவுட் சினிமாவில் தன் வளர்ச்சியை தடுக்க கும்பலாக சிலர் சேர்ந்துகொண்டு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதனையடுத்து ரஹ்மானிற்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் வைரமுத்துவும் ரஹ்மானுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஓடிடியில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’!

அதில், “அன்பு ரகுமான்! அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்: அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.” என்று எழுதியுள்ளார். ஆஸ்கர் விருது வாங்குவதற்கு முன்பு வரை பாலிவுட்டில் 30 படங்களுக்கும் மேல் இசையமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் மெல்ல மெல்ல நெப்போடிசம் காரணமாக குறைந்துவிட்டதாக திரை வசூல்கள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது ஒப்புநோக்கத் தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது