கோடம்பாக்கம் Corner

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ‘இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

தற்போதுகோலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். கமர்சியல் கதாநாயகி வேடங்களில் அதிகமாக நடித்த இவருக்கு, 'நடிகையர் திலகம்' படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு தேசிய விருதும் பெற்றார். அடுத்ததாக சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். இதுதவிர கைவசம் மூன்று தெலுங்கு படங்களையும் வைத்துள்ளார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு வந்த காதல் கடிதங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், “நான் பள்ளி இறுதி ஆண்டு படித்தபோது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது தொலைக்காட்சி வழியாக பிரபலம் அடைந்திருந்தேன். அப்போது என் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு கிப்ட் கொடுத்தார். அந்த கிப்டை திறந்து பார்த்தபோது, அதில் என் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் ஒரு காதல் கடிதம் இருந்தது. என் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமின்றி பத்திரமாக வைத்திருக்கிறேன்” என்று தான் பாதுகாக்கும் காதல் கடிதம் பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது