கோடம்பாக்கம் Corner

வீரப்பனைப் பற்றி முன்னாள் தமிழக ஏடிஜிபியான விஜயகுமார் ஐ.பி.எஸ்.எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, இணையத் தொடருக்கு திரைக்கதை அமைத்துள்ளது இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றிபெற்ற இந்த நிறுவனம், ஏற்கெனவே ISHQ போன்ற வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது. தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதிய ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு 11 அத்தியாயங்களுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், ஒரு போலீஸ் அதிகாரியின் பார்வையில் விரியும் தொடராக இது இருக்கும் என்கிறார்கள். இந்தப் புத்தகத்தை ராஜ்நாத் சிங் வெளியிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் ஐபிஎஸ் ஜம்மு மற்றும் காஷ்மீர் கவர்னருக்கு ஆலோசகராகவும் பணிபுரிந்தவர். இந்தத் தொடரில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி கட்சி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்