கோடம்பாக்கம் Corner

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட சத்யராஜ் நடிக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் புதிய போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறது.

ஹனி பீ படநிறுவனத்தைச் சேர்ந்த சார்பில் சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் தாயாரிக்கும் இந்தப் படம் குறித்து அவர் விவரிக்கையில், "எங்கள் படத்தின் போஸ்டருக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த மகத்தான நேர்மறை வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ரசிகர்கள் நிச்சயமாக எங்கள் படத்தை உச்சி முகர்ந்து பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையை இந்த வரவேற்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் அல்பாச்சினோ இவர் தான்!

இந்தப் பெருமைகள் அனைத்தும் சத்யராஜ் சாரையே சேரும். அவர் எங்கள் படத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முழுப் படத்தையும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. இறுதி கட்ட பின் தயாரிப்புப் பணியில் இருக்கும் இப்படம் விரைவில் தணிக்கைக்கு அனுப்பபடவிருக்கிறது" என்றார்.

இந்த ‘மாஸ்டர்’ அந்த ‘மாஸ்டர்’ அல்ல!

தீரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் கதை பற்றி கூறிய இயக்குநர், “ இன்று ஊழலில் திளைக்கும் நீதிபதிகள் பெருகிவிட்டார்கள். தீர்ப்பை எப்படி, எந்த வகையில் விற்கிறார்கள் என்ற ரகசியத்தை புட்டுப் புட்டு வைக்கும் க்ரைம் த்ரில்லர் இது” என்றார். சத்தியராஜ் தவிர இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், மதுசூதன் ராவ், ஹரீஷ் உத்தமன் மற்றும் ரேணுகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.