கோடம்பாக்கம் Corner

ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான இலங்கை அணியின் முக்கிய கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

தமிழில் தயாராகும் இந்தப் படத்தில், முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ‘விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் வேடத்தில் நடப்பது, தமிழர்களின் முகத்தில் கரி பூசுவது போன்றது’ என பல முன்னணி இயக்குனர்களே அவருக்கு அறிவுரை கூறினார்கள். அவர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய சீனு.ராமசாமி.

’மாநாடு’ படப்பிடிப்பு கோரோனா முழுவதும் முடிந்தால்தான் நடக்கும்!

ஆனால் இதுபோன்ற எதிர்ப்புகளையெல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் முன் பணம் பெற்றுக்கொண்டார் என படக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் எதிர்ப்புக்களை பற்றி அஞ்சாமல் முத்தையா முரளிதரன் சினிமாவில் நடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்துக்காகவே ஏற்கனவே கிரிக்கெட் பயிற்சியையும் அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’

இந்தப்படம் பற்றிய தற்போதைய முக்கியமான தகவல் அந்தப் படத்தின் கதாநாயகி பற்றியது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ராஜிதா விஜயன் தான் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.