கோடம்பாக்கம் Corner

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

ஹாலிவுட்டில் பிரம்மாண்ட ஆக்‌ஷனுக்குப் பெயர்பெற்ற ‘கிளிப் ஹேங்கர்’ படத்தின் சாகசக் காட்சிகளுக்கு இணையாக ‘இணைந்த கைகள்’ படத்தில் இமயமலைச் சாரலில் அந்தரத்தில் தொங்கி அசத்தியவர். அப்படிப்பட்டவர் பின்னர் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ஆனார். வெளிநாடுகளில் சினிமா டிவிடி விற்பனைச் சந்தையிலும் நுழைந்தார்.

’மாநாடு’ படப்பிடிப்பு கோரோனா முழுவதும் முடிந்தால்தான் நடக்கும்!

தற்போது அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ’தும்பா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது தனது அப்பாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் நடிகர் லால் - அண்ணா பென் ஆகிய இருவரும் தந்தை - மகளாக நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ஹெலன். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் அருண் பாண்டியனும் அவரது மகள் கீர்த்தியும் அப்பா மகளாக இணைந்து நடிக்கிறார்கள்.

எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி!

இந்தப்படத்திற்கு பரிசீலிக்கப்படும் தலைப்பு 'அன்புக்கு இனியாள்'. 'ஆண் தேவதை’ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த ரம்யா பாண்டியன் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.